Local

மோதரையில் துப்பாக்கிச்சூடு! பெண் உட்பட 5 பேர் படுகாயம்!!

கொழும்பு – 15, மோதரையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண்ணொருவர் உட்பட ஆறுபேர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று மாலை 3 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஓட்டோ ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த குழுவினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் ஒருவர் உட்பட அறுவர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மோதரைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading