பொலிஸ்மா அதிபர் கோமாளி! – சீறிப்பாய்கிறார் கோட்டா
சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாப்பதற்காக கம்பீரமாக செயற்படவேண்டிய பொலிஸ்மா அதிபர் கோமாளிபோல் செயற்பட்டு வருகின்றார் என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச விமர்சித்துள்ளார்.
எளிய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் பொலிஸ்மா அதிபரை விளாசித்தள்ளினார்.
“ நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. அதைபாதுகாக்கவேண்டிய பொலிஸ்மா அதிபர் நகைச்சுவையாளர்போல் செயற்பட்டுவருகிறார். பொது இடங்களில் ஆடுவது, பாடல் பாடுவது என உயர்பதவிக்கு பொறுத்தமற்ற வகையிலேயே அவரின் செயற்பாடுகள் அமைந்துள்ளன” என்றும் கோட்டாபய ராஜபக்ச கூறினார்.
அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, விமல்வீரவன்ச ஆகியோரும் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது பொலிஸ்மா அதிபரை சரமாரியாக விமர்சித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.