சின்மயியை படுக்கை அறைக்கு அழைத்தாரா வைரமுத்து – பலகோணங்களில் கருத்து
வைரமுத்து தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பாடகி சின்மயி கூறும் குற்றம்சாட்டில் உண்மையில்லை என நிகழ்ச்சி ஏற்பட்டாளர் சுரேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற “வீழ மாட்டோம்” நிகழ்ச்சியின் போது கவிஞர் வைரமுத்து தங்கியிருந்த அறைக்கு தன்னை தனிமையில் அழைத்தாக பாடகி சின்மயி பகீர் குற்றச்சாட்டை எழுப்பினார்.
7 தேசிய விருதுகளை பெற்றுள்ள கவிஞர் வைரமுத்து மீதான சின்மயியின் இந்த குற்றச்சாட்டுஇ தமிழ் திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் “அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருவதாகவும், உண்மையைக் காலம் சொல்லும்” என்றும் வைரமுத்து தெரிவித்திருந்தார்.