இலங்கை கிரிக்கெட் தலைமை நிதி அதிகாரி விளக்கமறியலில்!
கைதுசெய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேலதிக நீதிவான் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் செய்த முறைப்பாட்டுக்கமைய மேற்கொண்ட விசாரணைகளின்படி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பியல் நந்தன நேற்று கைதுசெய்யப்பட்டார்.
இங்கிலாந்து அணியுடனான போட்டித் தொடருக்கான ஔிபரப்பு உரிமத்தைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் சுமார் 5.5 மில்லியன் அமெரிக்க டொலரை மோசடி செய்ய முற்பட்டமை தொடர்பிலேயே இவர் கைதுசெய்யப்பட்டார்.