சதுரங்க ஆட்டம் ஆரம்பம்! நானே பிரதமர்!! – ரணிலும் மல்லுக்கட்டு
“அரசமைப்பின் பிரகாரம் நானே பிரதமர் பதவியில் தொடர்ந்து நீடிக்கின்றேன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பின்கதவால் வந்து ஜனாதிபதி முன்னிலையில் இன்றிரவு பிரதமராகப் பதவியேற்றுள்ளார். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்தத் திருட்டுத்தனத்துக்கு சட்ட வரம்புகளுக்கமைய நான் முடிவு கட்டுவேன்.”
– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் தெரிவித்துள்ளார்
அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றமை அரசமைப்புக்கு முரணானது என்று மங்கள சமரவீர தனது ‘டுவிட்டர்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.