Local

மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கின்றாரா கோட்டா?

புதிய பாதுகாப்புச் செயலராக கோட்டாபய ராஜபக்ஷ அடுத்த வாரம் நியமிக்கப்படவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்புச் செயலராக உள்ள கபில வைத்தியரத்னவுக்குப் பதிலாகவே கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகின்றது.

புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷ நேற்று பொலிஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

அதேவேளை, புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு சர்வதேச சமூகம், ஆதரவு அளிக்க வேண்டும் என்று, கோட்டாபய ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் கோரிக்கை விடுத்திருந்தார்.

“மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி தோற்கடிக்கப்பட்ட பின்னர், இன்னொருவருக்கு சர்வதேச சமூகம் ஆதரவு அளித்த பின்னர், நாட்டில் என்ன நடந்தது என்று அவர்களுக்குத் தெரியும். எனவே, நாட்டை மோசமடையச் செய்வதற்கு அனுமதிக்கக் கூடாது என்று அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு அளிக்குமாறு கோருகின்றேன். அவரால் மாத்திரமே, நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்த முடியும்” என்றும் அவர் கோட்டாபய கூறியுள்ளார்.

அதேவேளை, தாம் மீண்டும் பாதுகாப்புச் செயலராக பொறுப்பேற்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

கொதிக்கிறது கொழும்பு அரசியல்! அலரி மாளிகையை விடமாட்டோம்!! – ஐதேகவும் சூளுரை

ஜனநாயகத்துக்கு முரணான ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில், நாடாளுமன்றத்தைக் கூட்டும் வரை அலரி மாளிகையை பாதுகாப்பது என்று ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளதாக, அந்தக் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று காலை தகவல் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading