நாமல் குமாரவுக்கு நீதிமன்று வாய்ப்பூட்டு! ஊடகங்களுக்கு கருத்து வெளியிடத் தடை!!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கொலைச் சதித்திட்டம் சம்பந்தமாக ஊழல் எதிர்ப்புப் படையணியின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமார ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவதற்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று விடுத்துள்ளது.