திருமலையில் கஞ்சாவுடன் இருவர் வசமாக சிக்கினர்!
திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 2ஆம் வட்டார பிரதேசத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை பிராந்திய விஷத் தன்மையுடைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் 24 வயதுடைய இளைஞரை சோதனையிட்டபோது அவரிடமிருந்து 2 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கிண்ணியா முதலாம் வட்டாரப் பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் மனைவியிடம் (வயது 38) சோதனை மேற்கொண்டபோது அவரின் மார்புக்கச்சையில் இருந்து 50 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட இருவரையும், கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களையும் கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக திருகோணமலை பிராந்திய விஷத் தன்மையுடைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.