LocalWorld

தனது விடுதலையை வலியுறுத்தி முருகன் தொடர் உண்ணாவிரதம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், தன்னை விடுதலை செய்யக் கோரி வேலூர் சிறையில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

முருகன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசின் சிபாரிசின் மீது நடவடிக்கை எடுக்காமல் ஆளுநர் காலம் கடத்தி வருகின்றார்.

இது தொடர்பில் முருகன் கடந்த 31ஆம் திகதி வேலூர் மத்தியசிறை அதிகாரிகள் மூலம் ஆளுநருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

அதில், “ராஜீவ்காந்தி கொலைக்கும், எங்களுக்கும் தொடர்பு இல்லை, வேண்டுமென்றால் உண்மை கண்டறியும் சோதனை நடத்துங்கள். அல்லது கருணை கொலை செய்யுங்கள். இல்லையென்றால் உண்ணாவிரதம் இருந்து சாகவிடுங்கள்” என்று கூறியுள்ளார்.

இதனால் அவர் கடந்த 2ஆம் திகதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகின்றார். காலை உணவையும் சாப்பிட மறுத்து விட்டார். தொடர்ந்து 9ஆவது நாளாக முருகன் உண்ணாவிரதம் இருக்கின்றார்.

அவரிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading