அமைச்சர் ரிஷாத்துக்கு எதிராக மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கின்றார் அத்துரலிய!
“மீளவும் அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக மீண்டும் அஹிம்சை வழியிலான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.”
– இவ்வாறு தெரிவித்துள்ளார் நானடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர்.
“ஜனாதிபதி உட்பட முழு அரசும் விரைவாக மாற்றியமைக்கப்பட வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“நாடு தொடர்பில் அரசுக்கு எவ்வித அக்கறையும் கிடையாது. முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே பதவி துறந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுக்கு மீண்டும் அமைச்சுப் பதவியை அரசு வழங்கியுள்ளது.
இந்தச் செயற்பாட்டுக்கு எதிராக அஹிம்சை வழியிலான போராட்டத்தை மீண்டும் முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம்” – என்று அவர் மேலும் கூறியுள்ளார்.