மக்காவில் உம்ரா மற்றும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் ஆரம்பம்
மக்கா, ஹரம் ஷரீபிற்குள் நுழையக்கூடிய நேரத்தில் சுயபரிசோதனையாக உடல் வெப்ப நிலையை 6 மீற்றருக்கு அப்பால் இருந்து தரக்கூடிய கேமரா, கிரிமி தொற்று நீக்கிக் கருவி போன்றவை உள்ளடங்களான தற்காலிக பரிசோதனை கூடுகள் சில நுழைவாயில்களில் அமைக்கப்பட்டுள்ளன.
இம்முயற்சி கைகூடுமேயானால் ஹரம் ஷரீபிற்குள் நுழையும் ஏனைய வாயில்களிலும் இவை பொருத்தப்படவுள்ளது.இதனால் மீண்டும் உம்ரா மற்றும் ஹஜ் கடமையை நிறைவேற்ற கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளதாக அறியமுடிகிறது