சர்வதேச ஓட்டப் போட்டியில் உகண்டா வீரர் புதிய உலக சாதனை!
உகாண்டாவைச் சேர்ந்த தடகள வீரர் ஜோசுவா செப்டெகி (Joshua Cheptegei) புதிய உலக சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளார்.
குறித்த வீரர் வேலன்சியா நகரிலுள்ள துரியா மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியின் ஆடவருக்கான 10,000 மீற்றர் ஓட்டத்தில் பந்தய இலக்கை 26 நிமிடங்கள் 11.02 செக்கன்களில் கடந்து புதிய சாதனை படைத்தார்.
கடந்த 2005ஆம் ஆண்டு எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த தடகள வீரர் கெனெனிசா பெகெலே 26 நிமிடங்கள் 17.53 செக்கன்களில் பந்தய இலக்கை கடந்து உலக சாதனை படைத்திருந்த நிலையில் ஜோசுவா இதனை முறியடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.