மனித உடலில் கொரோனா எவ்வளவு நேரம் தங்கியிருக்கும்?
.
கொவிட் 19 என்ற கொரோனா வைரஸ் மனிதர்களின் சருமத்தில் சுமார் 9 மணி நேரம் தங்கி இருக்கும் திறன் கொண்டது என ஜப்பானிய ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சாதாரணமாக காய்ச்சல், தடிமன் ஆகியவற்றை ஏற்படுத்தும் வைரஸ் மனிதர்களின் சருமத்தில் இரண்டு அல்லது மூன்று மணி நேரங்கள் மாத்திரமே இருக்க முடியும். கொரோனா வைரஸ் ஏனைய வைரஸ்களை விட திறன் கொண்டது என ஆய்வில் தெளிவாகியுள்ளது.
எத்தனோல் கலந்த கிருமி நாசனி திரவங்களை பயன்படுத்துவதன் மூலம் கொரோனா வைரஸை 15 நொடிகள் அழிக்க முடியும் என்பதையும் ஜப்பானிய ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் சருமத்தில் இருந்தாலும் அது மூக்கு, வாய் மற்றும் கண்கள் வழியாக மாத்திரமே உடலுக்குள் செல்ல முடியும்.
முககவசங்களை அணிவது, ஒரு மீற்றர் அல்லது இரண்டு மீற்றர் சமூக இடைவெளியை பேணுவது மற்றும் கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திக்கொள்வதன் மூலம் இந்த வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க முடியும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவ சஞ்சிகை ஒன்று இந்த புதிய ஆய்வு தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.