இலங்கை விமான நிலையத்தில் சிக்கிய 22 கிலோ தங்கம்!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெருந்தொகை தங்கத்துடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களிடமிருந்து 22 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது இதன் சந்தைப் பெறுமதி 400 மில்லிய் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடத்தல் தங்கத்துடன் நான்கு இலங்கையர்கள் விமான நிலையத்தை வந்தடைந்த போதே, அவர்கள் சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தங்க தொகுதி டுபாயில் இருந்து சென்னை ஊடாக இலங்கைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளர்.