Cinema

தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை!

ஹரிஷ் கல்யாண், இவானா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள் ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தோனி தொடங்கியுள்ளார்.

இந்த நிறுவனம், அடுத்ததாக ஒரு நேரடி தமிழ் படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘எல்.ஜி.எம்’ (Lets Get Married) என்று பெயரிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட்) திரைப்படத்தில் நடிகை நதியா, நட்சத்திர நடிகர் ஹரிஷ் கல்யாண், நாயகி இவானா, நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

இந்த நிலையில் ‘எல்.ஜி.எம்’ (Lets Get Married) படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை இரவு 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தோனி தனது பேஸ்புக் தளத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடுவார் என படக்குழு அறிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading