Gossip

காதலியுடன் உல்லாசம் அனுபவித்து பிறகு எரித்து கொலை செய்த காதலன்!

யாதகிரி தாலுகா அரகெரேவை சேர்ந்தவர் மாருதி ராதோடு. இவர் பெயிண்டர் ஆவார். இவருக்கும், உத்தர பிரதேசத்தை சேர்ந்த பென்டெலா வெர்மா என்ற இளம்பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் காதலித்து வந்தனர். பென்டெலா வெர்மா எப்போதும் செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார்.

மேலும் டிக்-டாக் போன்ற செயலிகளில், தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து வீடியோ எடுத்து வந்துள்ளார். இதுகுறித்து மாருதி ராதோடுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் வீடியோ எடுப்பதை நிறுத்துமாறு கூறி உள்ளார்.

ஆனால் அதற்கு அந்த பெண் மறுத்துள்ளார். இதையடுத்து உத்தர பிரதேசத்தில் இருந்து அந்த பெண்ணை, அவர் தனது சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளார்.

பின்னர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இளம்பெண்ணும், அவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போதும் டிக்-டாக் போன்ற செயலியில் வீடியோ எடுப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் ஊற்றி… இதில் ஆத்திரமடைந்த மாருதி ராதோடு, பென்டெலா வெர்மாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், போலீசிடம் சிக்காமல் இருப்பதற்காக அவரது உடலை விளைநிலத்தில் போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.

மேலும் அவர் தற்கொலைக்கு முயன்றார். அந்த சமயத்தில் அவரது குடும்பத்தினர் மாருதி ராதோடை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தனது காதலியை கொன்றுவிட்டு, தற்கொலைக்கு முயன்றது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து செய்தனர். தொடர்ந்து போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading