Peoples Youth Choice Brand விருதை வென்ற Samsung
இந்த ஆண்டின் People’s Youth Choice Brand விருதை வென்ற Samsung, தனது சலவை இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் இன்வெர்ட்டர் மோட்டார் மற்றும் அதன் குளிர்சாதனப் பெட்டிகளில் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் இன்வெர்ட்டர் கம்ப்ரஸருக்கு முதல் முறையாக 20 ஆண்டு உத்தரவாதத்தை அறிமுகப்படுத்தி புதிய மைல்கல்லை ஏற்படுத்தியுள்ளது. Samsung தற்போது சந்தையில் 20 ஆண்டு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தை வழங்கும் ஒரே நுகர்வோர் மின்னணு வர்த்தக நாமமாகும்.
தயாரிப்புகளின் நம்பகத்தன்மை மற்றும் நீடித்து நிலைத்தன்மையை அதிகரிப்பதன் மூலம், Samsung வழங்கும் இந்த தனித்துவமான சலுகை வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த ஆறுதலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் இது மின்-கழிவைக் (e-waste) குறைப்பதற்கும், நிலைத்தன்மையை ஊக்குவிப்பதற்கும், வாடிக்கையாளர்களுக்கு உயர்தர மற்றும் நீடித்த சாதனங்கள் மற்றும் நிலையான வாழ்க்கை முறையை வழங்குவதற்குமான உறுதிப்பாட்டை மேலும் ஒத்துழைப்பு வழங்குகிறது.
Samsung இன் மேம்படுத்தப்பட்ட Digital Inverter Compressor மற்றும் Digital Inverter Motor ஆகியவையின் தரம் மற்றும் நிலைத்தன்மையில் நிறுவனத்தின் முதலீட்டை நிரூபிக்கின்றதுடன், நிறுவனம் இறுதியாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற முடிந்துள்ளது.
Peoples Youth இது குறித்து கருத்து தெரிவித்த Samsung இலங்கையின் முகாமைத்துவ பணிப்பாளர் சன்க்வா சொன்க், “எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நிலையான தீர்வுகளை வழங்குவதற்கான எங்கள் பார்வையுடன், எங்கள் சலவை இயந்திரங்கள் மற்றும் குளிர்சாதன பெட்டிகளில் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் இன்வெர்ட்டர் மோட்டார்கள் மற்றும் கம்ப்ரசர்களுக்கு 20 ஆண்டு உத்தரவாதத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். வீட்டு உபயோகப் பொருட்களை அடிக்கடி மாற்றுவது நேரத்தையும் சக்தியையும் விரயமாக்குவது மட்டுமின்றி உடல் ரீதியாகவும் கழிவுகளை குறைத்துக் கொள்ளவும் முடிகிறது. எனவே, இந்த முயற்சியின் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மன அமைதியையும் நீண்ட ஆயுளையும் வழங்கும் அதே வேளையில் மின்னணுக் கழிவுகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.” என தெரிவித்தார்.