மகளை வெட்டி பிரிட்ஜில் வைத்து சமைத்து சாப்பிட்ட தாய்!
பெற்ற மகளை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி சமைத்த கொடூர தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் பிரேசிலில் நடந்திருக்கிறது.
பிரேசிலின் செள பவுலோ பகுதியில் வசித்து வரும் ரூத் ஃபுளோரியானோ தனது கணவனை பிரிந்து 9 வயது மகள் மற்றும் ஆண் நண்பருடன் வசித்து வந்தார். கடந்த வாரம் வீட்டுக்கு வந்த ஆண் நண்பரின் தாயார் பிரிட்ஜில் வெட்டப்பட்ட உடல் பாகங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். இது தொடர்பாக ரூத் ஃபுளோரியானோவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அப்போது, கணவரை விவாகரத்து செய்ததால் மகள் அடிக்கடி தன்னுடன் சண்டைபோட்டு வந்ததாகவும், கடந்து 8ம் தேதி போதையில் மகளை கத்தியால் குத்திக் கொன்றதாகவும் கூறினார். சடலத்தை அப்புறப்படுத்துவது எப்படி என இணையத்தில் ரூத் ஃபுளோரியானோ தேடி உடலை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக சமைத்து அவற்றை அப்புறப்படுத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனை கேட்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.