கடமை நேரத்தில் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை
கடமை நேரத்தில் மருத்துவர்கள் உட்பட சுகாதாரப் பணியாளர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு வட மாகாண மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.சத்தியமூர்த்தி,
“சில சுகாதார ஊழியர்கள் தங்கள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி நோயாளிகளைப் பார்ப்பதற்குப் பதிலாக சமூக ஊடக தளங்களில் உலவுவதாகக் குற்றம் சுமத்தப்பட்ட பல முறைப்பாடுகளை கிடைக்கபெற்றுள்ளமையை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தடை குறிப்பாக கடமை நேரத்தில் சமூக ஊடக பயன்பாட்டிற்கு மாத்திரமே பொருந்தும்.
சட்டபூர்வமான வேலை தொடர்பான நோக்கங்களுக்காக தொலைப்பேசிகள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தாது இந்த தடை கட்டுப்படுத்தாது.
சுகாதார ஊழியர்கள் தங்கள் தொலைப்பேசி சாதனங்களை தகவல் தொடர்பு, மருத்துவ ஆதாரங்களை அணுகுதல் மற்றும் பிற அத்தியாவசிய பணிகளுக்கு பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த தடையானது சுகாதார ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை மீறும் நோக்கம் கொண்டதல்ல. மாறாக நோயாளிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்ளும் பிரச்சினையை தீர்க்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்டது.
கடமை இல்லாத நேரங்களில் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதற்கு எவ்விதத் தடைகளும் இல்லை. சுகாதாரப் பணியாளர்கள் ஓய்வு நேரத்திரத்தில் இவற்றை பயன்படுத்தவும் தடை இல்லை“ என்றும் அவர் கூறியுள்ளார்.