தர்கா நகர் ஸாஹிரா மஹா வித்தியாலயத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழா!
*கடந்த 26/11/2023 ஞாயிற்றுக்கிழமை தர்கா நகர் இஸ்லாமிய நலம்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் தர்கா நகர் ஸாஹிரா மஹா வித்தியாலயத்தின் நளீம் ஹாஜியார் மண்டபத்தில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமை பரிசு பரீட்சையில் தர்கா நகர் ஸாஹிரா, அல்ஹம்ரா, முஸ்லிம் மகளிர் தேசிய பாடசாலை ஆகிய மூன்று பாடசாலைகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை கௌரவித்து பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
சங்கத்தின் தலைவர் தேசபந்து அல்ஹாஜ் ஏ .பீ. எம்.ஸூஹைர் ஜே.பி. அவர்கள் தலைமையில் நடைபெற்ற மேற்படி வைபவத்துக்கு பிரதம அதிதியாக முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளர் கௌரவ அல்ஹாஜ் பைஸல் ஆப்தீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். பிரதம அதிதிக்கு சங்கத்தின் தலைவர் தேசபந்து அல்ஹாஜ் ஏ.பீ.எம்.ஸூஹைர் ஜே.பி. நினைவுச் சின்னத்தை வழங்கினார்.