ஒன்லைனில் புடவை விற்று பாடசாலைக்கு பணத்தை கொடுத்த தமிழ்ப்பட நடிகை!
நடிகை நவ்யா நாயர் ஒன்லைனில் புடவை விற்று, சிறப்பு பாடசாலைக்கு நன்கொடை வழங்கியதன் மூலம் பாராட்டுகளை பெற்று வருகிறார்.
தமிழில் அழகிய தீயே படத்தின் மூலம் அறிமுகமானவர் நவ்யா நாயர். அதனைத் தொடர்ந்து சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக்கிளிகள், மாயக்கண்ணாடி, சில நேரங்களில் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
மலையாளத்தில் பிரபல நடிகையான இவர் கன்னட மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், தனது புதிய புடவைகள் மற்றும் அணிய முடியாத புடவைகளை ஒன்லைனில் விற்பனை செய்வதாக சமூக வலைதளத்தில் சமீபத்தில் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அவரது புடவைகள் ஒன்லைனில் விற்பனையாகத் தொடங்கின. ஆனால் அவர் அதில் கிடைத்த பணத்தை நன்கொடையாக அளித்துள்ளார்.
இசை நிகழ்சிகளை நடத்தியே பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த பிரபல பாடகி
இசை நிகழ்சிகளை நடத்தியே பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த பிரபல பாடகி
பத்தனாபுரத்தில் உள்ள காந்திபவனுக்கு சென்ற நவ்யா நாயர், அங்கு வசிப்பவர்களுக்கு புதிய ஆடைகளையும், பயனுள்ள பொருட்களையும் வாங்கிக் கொடுத்துள்ளார்.
அத்துடன் காந்திபவன் சிறப்பு பாடசாலைக்கு ரூ.1 லட்சம் நன்கொடையையும் அவர் வழங்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததைத் தொடர்ந்து பாராட்டுகளை பெற்று வருகிறார்.
முன்னதாக, புடவை விற்பனை அறிவிப்பின்போது கைத்தறி, காஞ்சிபுரம், பனாரஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான புடவைள் இருப்பதாக அவர் அறிவித்தது விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.