உலக மக்கள் தொகையில் ஏற்படவுள்ள மாற்றம்!
2080ஆம் ஆண்டுகளின் பாதியில் உலக மக்கள்தொகை ஆக அதிகமாகச் சுமார் 10.3 பில்லியனை எட்டும் என்றும் ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன் பின்னர் மக்கள்தொகை சரியத் தொடங்கிவிடும் என குறிப்பிடப்படுகின்றது.
இந்த நூற்றாண்டு முடிவதற்குள் மக்கள்தொகை 10.2 பில்லியனாக இருக்கும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
தற்போது உலக மக்கள்தொகை 8.2 பில்லியனாகும். ஏற்கனவே சீனா, ரஷ்யா, ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட சுமார் 63 நாடுகளில் மக்கள்தொகை உச்சத்தைத் தொட்டுவிட்டது.
அடுத்த 30 ஆண்டுகளில் இன்னும் கிட்டத்தட்ட 50 நாடுகள் அந்தப் பட்டியலைச் சேரும் என ஐக்கிய நாட்டு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
2054ஆம் ஆண்டுக்குப் பிறகும் இந்தியா, இந்தோனேசியா, நைஜீரியா, அமெரிக்கா உள்ளிட்ட சுமார் 120 நாடுகளில் மக்கள்தொகை தொடர்ந்து வளர்ச்சி காணும் என்றது நிறுவனம்.
உலக மக்கள்தொகை இன்னும் மூப்படையக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
2070களில் 65 வயது அல்லது அதற்கும் மேற்பட்டோரின் எண்ணிக்கை 2.2 பில்லியனாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.