Cinema

அரசியலா…? வேண்டவே வேண்டாம்! – நடிகர் முத்துராமனின் அனுபவம்

 

தங்களை யார் உயர்த்தினார்களோ அந்த ரசிகர்களிடம் தான் அரசியலில் ஈடுபடலாமா? – என்று வெளிப்படையாக ஊடகத்தில் கேட்கக்கூடிய பண்பு நடிகர் முத்துராமனிடம் இருந்திருப்பதே குறிப்பிடத்தக்க ஒன்று தான்!

“அரசியலில் ஈடுபடலாமா?” என்று நடிகர் முத்துராமன் 25.11.76 அன்று வெளிவந்த இதழ் ஒன்றில் வாசகர்களிடம் கேட்டிருந்த போது – பெரும்பாலான வாசகர்கள் அளித்த பதில்:

“வேண்டாம்”

அதிலும் சென்னையைச் சேர்ந்த எம்.ஆர்.குமார் என்கிற வாசகர் எழுதியிருந்த பதில்:

“உங்களுக்குக்கும் மேலான மூத்த நடிகர்கள் சேர்ந்து எங்களைக் குழப்புவதே போதும். நீங்களும் கூடச் சேர்ந்து எங்களைச் சோதிக்காதீர்கள். (அரசியலின் கசப்பு அனுபவங்களுக்கு அணுகுக; ஸ்ரீகாந்த், ரவிச்சந்திரன்)”

வாசகர்களின் குரலுக்கு மதிப்புக் கொடுத்து நேரடி அரசியலுக்குள் முத்துராமன் இறங்கவில்லை!

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading