6 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாலம் கண்டுபிடிப்பு!
பிரான்ஸில் மத்திய தரைக்கடல் பகுதியில் தண்ணீருக்கடியில் குகைப்பாலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த பாலம் 6,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கடந்த 2000ம் ஆண்டு பிரான்சின் மல்லோர்கா தீவில் நீருக்கடியில் மூழ்கிய நிலையில் பாலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
25 அடி நீளமுள்ள சுண்ணாம்புக்கல் பாலம் குறித்து 24 ஆண்டுகளாக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வந்தனர்.
இதில், பாலத்தின் மீது படிந்த கனிமங்கள் மற்றும் கடல் நீர் மட்டத்தின் அதிகரிப்பைக் கணக்கிட்டு, பாலத்தின் வயதை கணக்கிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.