காதலியுடன் நேரம் செலவிட சம்பளத்துடன் விடுமுறை
தாய்லாந்து, பாங்காக் மார்க்கெட்டிங் நிறுவனம், ஊழியர்களின் நலனை மேம்படுத்தவும், ஊழியர்களை சந்தோஷப்படுத்தவும் பல்வேறு சலுகைகளை வழங்கி உள்ளது.
ஊழியர்கள், காதலியுடன் நேரம் செலவிட வசதியாக, சம்பளத்துடன் விடுமுறை வழங்கப்படும் என்பது முதல் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேவையான நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம். ஒரு வாரத்துக்கு முன்பே தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை. உங்கள் நலனே எங்கள் நலன், நீங்கள் மகிழ்ச்சியுடன் இருந்தால் தான் நிறுவனத்தில் வேலை நன்றாக நடக்கும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.