Al Jazeera அலுவலகத்தை மூட இஸ்ரேல் உத்தரவு!
அல் ஜசீரா தொலைக்காட்சி அலுவலகத்தை 45 நாட்களுக்கு மூட இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்டுள்ளது.
பாலஸ்தீனர்கள் வசிக்கும் பகுதியான மேற்கு கரையில் இயங்கிவந்த அல் ஜசீரா தொலைக்காட்சி அலுவலகத்தையே மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதற்கான உத்தரவு நகலுடன் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தங்கள் அலுவலகத்துக்குள் நுழைந்ததை அல் ஜசீரா நிறுவனம் நேரலையில் ஒளிபரப்பு செய்தது.
கத்தார் மன்னருக்கு சொந்தமான அல் ஜசீரா செய்தி நிறுவனம், பாலஸ்தீனர்களுக்கும், ஹமாஸுக்கும் ஆதரவாக ஒருதலைபட்சமாக செய்தி வெளியிட்டுவருவதாக, நெடுங்காலமாக இஸ்ரேல் குற்றம்சாட்டிவருகிறது.