வவுனியாவில் மாணவனை துஷ்பிரயோகம் செய்ததாக ஆசிரியை கைது
வவுனியாவில் 14 வயது மாணவன் ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக பயிலுனர் ஆசிரியை ஒருவர் (24.09) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கட்டுறு பயிலுனராக பணியாற்றிய கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
14 வயது மாணவன் ஒருவரை காதலிப்பதாக ஆசைவார்த்தைகள் கூறிய குறித்த பயிலுனர் ஆசிரியை பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்ததுள்ளதாகவும் இது தொடர்பில் பாடசாலையில் முறைப்பாடு செய்தும் தீர்வு கிடைக்காத நிலையில் மாணவனின் பெற்றோரால் சிறுவர் பிரிவு மற்றும் வவுனியா பொலிஸ் என்பவற்றில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது
இதேவேளை ஆசிரியை தன்னை காதலித்துக்கொண்டு பாடசாலையில் உள்ள உயர்தர மாணவனுடன் நெருங்கி பழகியதாகவும் அந்த மாணவனுடன் மாலை நேரங்களில் நகரபகுதிக்கு ஒன்றாக பயணித்தையும் அவதானித்த சிறுவன் தொடர்ந்து பாடசாலையில் வைத்து ஆசிரியை உயர்தர மாணவனுடன் நெருக்கமாக இருந்ததை அவதானித்துள்ளான் இதனால் விரக்தியடைந்த சிறுவன் ஆசிரியையுடன் குழப்பத்தில் ஈடுபடவே பிரச்சினை வெளியில் கசிய ஆரம்பித்தது என பாதிக்கப்பட்ட சிறுவன் தெரிவித்துள்ளார்
குறித்த விடயம் பெற்றோருக்கு தெரியவரவும் தமது மகன் பாதிப்படைந்ததை அறிந்து பாடசாலையில் அறிவித்தும் பாடசாலை நிர்வாகம் ஆசிரியைக்கு எதிராக எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பெற்றோர் தெரிவிக்கின்றனர்
மேலும் பொலிஸ் முறைப்பாட்டையடுத்து குறித்த மாணவனின் வாக்குமூலம் பெறப்பட்டதுடன், மாணவன் மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாக்கு மூலத்தின் அடிப்படையில் பயிலுனர் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.