அனுபவம் இல்லாத விடயங்களில் அவசரப்படாதீர்கள்- ரணில் எச்சரிக்கை!
முட்டை ஒன்றின் இன்றைய மொத்த வியாபார விலை 31 ரூபாவாகும் விலைக்குறைப்பை யாரும் கருத்தில் கொள்ளவில்லை அவர்களை கட்டாயப்படுத்தினால் நாட்டில் முட்டைத்தட்டுப்பாடு ஏற்படும் யாரும் நஷ்டத்தில் தொழில் செய்யவிரும்பமாட்டார்கள்.
சீனி மற்றும் எண்ணை போன்ற அத்தியவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. பருப்பு பத்து ஆயிரம் கிலோகிராம் வழங்கிய இடத்தில் தற்போது ஆயிரம் கிலோ கிராம் மட்டுமே வழங்கப்படுகின்றது.
வெளிநாட்டு கடனில் வாழ்க்கை நடத்துகின்றபோது அதிகளவான மானியம் வழங்கினால் கடன்வழங்குவோர் கைவிரித்து விடுவர்.
அது நாட்டில் மீண்டும் வரிசையை தோற்றுவித்துவிடும் யார் என்ன சொன்னாலும் மக்கள் நம்மவர்கள்!
அனுபவமில்லாத விடயங்களில் அவசரமாக மூக்கை நுழைத்து மக்களை வேகமாக அவதியில் தள்ளிவிட முயற்சிக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி திரு ரணில் விக்கிரமசிங்ஹ தெரிவித்துள்ளார்.