அழகிப் போட்டியில் 80 வயதுப் பெண்!
பிரபஞ்ச அழகி போட்டியில் கலந்துகொள்ள வயது ஒரு தடை இல்லை என்பதை 80 வயதான Choi Soon-hwa நிரூபித்துள்ளார்.
தென் கொரியாவின் பிரபஞ்ச அழகி போட்டியில் தம்முடைய பேத்தி வயதில் உள்ள பெண்களோடு அவர் போட்டியிடுகிறார்.
தற்போது அவர் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார். வாழ்க்கையில் அவர் பல சிரமங்களைச் சந்தித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
தாதியாக இருந்த அவர் ஓய்வுப்பெற்ற பிறகு கிட்டத்தட்ட அனைத்தையும் இழக்க வேண்டிய சூழல் எழுந்தது. பணம், வீடு என்று அனைத்தையும் இழந்த போதிலும் அவர் துவண்டுபோகவில்லை.
பிரபஞ்ச அழகி போட்டியின் நேர்காணலில் கலந்துகொண்டபோது வயதைவிட அவருடைய குணநலன்கள் பெரிதாக வெளிப்பட்டன.
“நான் சவால்மிக்க காலக்கட்டத்தில் வளர்ந்தேன். என்னுடைய சொந்த பிரச்சினைகளைச் சமாளிக்க என்னால் விடாமுயற்சியுடன் போராட முடியும். ஆனால் இளைய தலைமுறையினருக்கு அது பற்றி தெரியாது” என சொய் குறிப்பிட்டுள்ளார்.