பூமிக்கு 2 ஆவது நிலவு வானில் ஏற்படப்போகும் அதிசயம்!
பூமியின் நிலவுக்கு நாளை புதிய நண்பர் கிடைக்க உள்ள நிலையில் அதனை 2-வது நிலவு என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பூமி இரண்டாவது நிலவைப் பெற உள்ளது. 2024 PT5 என்று பெயரிடப்பட்ட ஒரு சிறிய சிறுகோள் – இன்று மற்றும் நவம்பர் 25 க்கு இடையில் சுமார் இரண்டு மாதங்களுக்கு பூமியை சுற்றி வர உள்ளது.
அமெரிக்க வானியல் சங்கத்தின் ஆய்வுக் குறிப்புகளின்படி, 2024 PT5 பூமியின் தற்காலிக ‘மினி நிலவாக’ இருக்கும் என்று கூறியுள்ளது.
அதாவது ஒரு சிறுகோள்(2024 PT5) 2 மாதங்களுக்கு பூமியை சுற்றி வர உள்ளது. இதுவே 2-வது நிலவாக கருதப்படுகிறது.
எனினும் இந்த சிறுகோளை வெறும் கண்காளல் பார்க்க முடியாது. இதை (professional equipment)ப்ரத்யேக உபகரணம் கொண்டு தான் பார்க்க முடியும். காரணம் இது மிகவும் சிறிதாக உள்ளது மற்றும் டல் பாறையால் ஆனது.
2024 PT5 சிறுகோள் பற்றி விஞ்ஞானிகள் கூறுகையில், இது நமது கிரகத்தை முழுவதுமாக சுற்றி வரப் போவதில்லை. மாறாக அது தனது சுற்றுப்பாதையை மாற்றியமைக்கப் போகிறது என்று கூறினர்