ரணிலுக்கு ஐ.தே.க தலைமைத்துவம்
காலி மாவட்டத்தின் காலி தொகுதியை மையமாகக் கொண்ட ஐ.தே.க செயற்பாட்டாளர்களின் விசேட கூட்டம் நேற்று (28) காலி, உலுவிடிகேயிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றதுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே தொடர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோரும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.