இஸ்ரேலில் இலங்கையர் உயிரிழப்பு!
இஸ்ரேலில் பணிபுரிந்து வந்த இலங்கையர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயதான அவர், தனிப்பட்ட காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
குறித்த இளைஞன் 6 மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேலுக்கு வந்து விவசாய துறையில் பணியாற்றி வருவதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்தார்.
உயிரிழந்த இளைஞரின் சடலத்தை இலங்கைக்கு அனுப்பும் விடயம் தொடர்பில் தற்போது செயற்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.