Jobs

முழுக் குடும்பத்திற்கும் முழுமையான வாய்ச்சுகாதார பராமரிப்பை வழங்கும் க்ளோகார்ட் பஞ்ச சக்தி  சந்தையில் புதிய தோற்றத்துடன் அறிமுகம்

இலங்கையின் வாய்ச் சுகாதார பராமரிப்பில் மிகவும் நம்பகமான பெயரான க்ளோகார்ட், இயற்கை மூலப்பொருட்களின் பல்வேறு நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இயற்கை மூலிகை குணநலன் கொண்ட பற்பசையான Clogard Pancha Shakthi இனை புதிய தோற்றத்தில் அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறது. தமது நுகர்வோருக்கு முழுமையான மற்றும் பல்வேறு பயன்கள் கொண்ட வாய்ச் சுகாதார பராமரிப்பு தீர்வுகளை வழங்குவது தொடர்பில் க்ளோகார்ட் கொண்டுள்ள இணையற்ற உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது.

இரிமேதாதி தைலம் அடங்கிய புதிய க்ளோகார்ட் பஞ்ச சக்தியானது, வாடிக்கையாளர்களுக்கு ஐந்து முக்கிய நன்மைகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பற்குழி ஏற்படுவதை தடுத்து பற்களை பாதுகாத்தல், பல்ஈறு வெண்படைகள் உருவாவதை நீக்குதல், ஆரோக்கியமான ஈறுகள் உருவாக ஊக்குவித்தல், பற்களின் நிறமாற்றம் ஏற்படுவதை குறைத்தல், வாயை தூய்மையாக பேணி சுத்தமான சுவாசத்தை வழங்குதல் உள்ளிட்ட நன்மைகளை பஞ்ச சக்தி பற்பசை வழங்குகின்றது. பற்குழிகள் மற்றும் ஈறு தொடர்பான பிரச்சினைகள், பற்களின் நிறமாற்றம், வெண்படைகள், வாய்த் துர்நாற்றம் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களின் இந்த அனைத்து பிரச்சினைகளுக்குமான ஒரே தயாரிப்பின் மூலம் தீர்வுகளை வழங்குவது பஞ்ச சக்தி பற்பசையாகும். இந்த வாய்ச் சுகாதார பிரச்சினைகளுக்கு எதிராக செயற்படக் கூடிய மருத்துவ குணங்கள் கொண்ட இரிமேதாதி தைலம், இயற்கை மூலிகைகளின் கலவையில் இருந்து தயாரிக்கப்படும் பெறுமதிவாய்ந்த தைலமாகும். இந்த இரிமேதாதி தைலமானது, கராம்பு, கறுவாப்பட்டை, ஏலம், சாதிக்காய் உள்ளிட்ட 23 இற்கும் மேற்பட்ட இயற்கை மூலப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றது. இவ்வாறான பெறுமதி வாய்ந்த மூலிகை பஞ்ச பலம் மிக்க சக்தி கொண்ட பஞ்ச சக்தி பற்பசையானது, முழுமையான வாய்ச் சுகாதாரத்தை பேண உதவுகின்றது.

இது தொடர்பில் Hemas Consumer Brands சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் டெரிக் அந்தனி தெரிவிக்கையில், “க்ளோகார்ட் ஆனது, நீண்ட காலமாக பற்குழி பாதுகாப்பை வழங்குகின்ற நிபுணர் எனும் ஒரு பெயராக திகழ்ந்து வருகிறது. ஐந்து விதமான வாய்ச் சுகாதார பராமரிப்பு பிரச்சினைகளை எதிர்த்துப் போராடும் வகையிலான பல்வேறு பயன் கொண்ட ஒரு தீர்வாக க்ளோகார்ட் பஞ்ச சக்தி உருவாக்கப்பட்டுள்ளதோடு, இதன் மூலம் முழுக் குடும்பத்திற்கும் ஒரு சிறந்த தீர்வாக அதனை அறிமுகப்படுத்தலாம். இதற்குக் காரணம், எமது வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியாக வளர்ந்து வரும் தேவைகளை எம்மால் அடையாளம் காண முடிகின்றமை, மற்றும் இத்தேவைகளின் அடிப்படையில் முழுமையான வாய்ச் சுகாதார பராமரிப்பு தீர்வுகளை வழங்குவதற்கான திறனை நாம் பெற முடிந்துள்ளமையாகும்,” என்றார்.

தாய்மார்கள் தங்கள் முழு குடும்பத்தின் பல் தொடர்பான பிரச்சினைகளுக்கும் ஏற்ற பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தீர்வு தொடர்பில் ஆர்வமாக இருப்பதால், இந்த மூலிகைப் பற்பசைக்கான தேவை மிக வேகமாக அதிகரித்துள்ளது. இவ்வாறு மூலிகைப் பற்பசைகளுக்கான தேவையை பூர்த்தி செய்ய, க்ளோகார்ட் பஞ்ச சக்தி தயாரிப்புகளில் காணப்படும் குணநலன் மிக்க தரமானது, ஏனைய உள்நாட்டு பற்பசை வர்த்தகநாமங்களுக்கும் முன்மாதிரியாக விளங்குகின்றது.

க்ளோகார்ட் பஞ்ச சக்தியானது, வாடிக்கையாளர்களால் எளிதில் அடையாளம் காணும் வகையில் தற்போது புதிதாக வடிவமைக்கப்பட்ட பொதியில் வருவதோடு, இப்புதிய பொதியில் முக்கிய மூலப்பொருட்கள் மற்றும் அதன் ஐந்து நன்மைகள் தெளிவாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும் என்பதோடு, இதன் மூலம் இத்தயாரிப்பு பற்றிய விழிப்புணர்வு நுகர்வோருக்கு அளிக்கப்படுறது. இலங்கையர்களுக்கு சிறந்த வாய்ச் சுகாதார பராமரிப்புத் தீர்வுகளை வழங்குவதில் க்ளோகார்டின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

புதிய க்ளோகார்ட் பஞ்ச சக்தி பற்பசையானது, தற்போது Hemas E-store இல் https://hemasestore.com/brand/clogard/ ஊடாக அல்லது நாடு முழுவதும் உள்ள முன்னணி பல்பொருள் அங்காடிகள் மற்றும் சிறிய அங்காடிகளில் கிடைக்கின்றன.

ஐந்து முக்கிய வாய்ச் சுகாதார பிரச்சினைகளுக்கான ஒரே தீர்வு, புதிய க்ளோகார்ட் பஞ்ச சக்தி பற்பசையிடமிருந்து

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading