Cinema

நடிகர் ரஜனிகாந்திற்கு நடந்தது என்ன?

 

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ திரைப்படம் எதிரவரும் 10ஆம் திகதி ம்  வெளியாகவுள்ளது.

தா.செ.ஞானவேல் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ரஜினியுடன் அமிதாப் பச்சன், ராணா, ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ரக்‌ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அண்மையில் இந்தப் படத்தின் டீசர் வெளியான நிலையில், நாளை (புதன்கிழமை) இதன் ‘ட்ரெய்லரை’ படக்குழு வெளியிடுகிறது.

‘வேட்டையன்’ படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் ரஜினி நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயிற்றில் சில பிரச்சினை உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கூறி உள்ளது.

ஏற்கனவே கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உயர் ரத்த அழுத்தம் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினி சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading