Prime Lands Residencies PLCஇன் ‘The Grand Ward Place’ இணையத்தளம் 14ஆவது BestWeb.lk 2024 போட்டியில் இரட்டை விருதுகளை சுவீகரித்தது
இலங்கையின் முன்னணி சொகுசு ரியல் எஸ்டேட் நிறுவனமான Prime Lands Residencies PLC, சமீபத்தில் நடைபெற்ற LK Domain Registry மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட 14ஆவது BestWeb.lk 2024 போட்டியில் ‘The Grand Ward Place’ www.thegrand.com.lk இணையத்தளத்திற்காக இரண்டு மதிப்புமிக்க விருதுகளை சுவீகரித்து டிஜிட்டல் புத்தாக்க செயற்பாட்டாளராக மீண்டும் தன்னை நிலைநிறுத்தியுள்ளது.
அதிசொகுசு condominiumஇன் இணையத்தளமானது, Best Mobile User Experience Corporate Websiteஇற்கான தங்க விருதையும், Best Corporate Websiteஇற்கான வெள்ளி விருதையும் பெற்றுள்ளமை அனைத்து தளங்களிலும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தனித்தன்மை வாய்ந்த இணையவழி அனுபவத்தை வழங்கும் நிறுவனத்தின் திறனை பிரதிபலிக்கின்றது.
ஆகஸ்ட் 14, 2024 அன்று Cinnamon Grand ஹோட்டலில் நடைபெற்ற கோலாகலமான விழாவில், Prime Lands Residencies PLCயின் அதிகாரிகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன. அங்கு முன்னணி டிஜிட்டல் புத்தாக்க செயற்பாட்டாளர்கள் மற்றும் தூர நோக்க செயற்பாட்டாளர்கள் ஒன்றுகூடி தொழில்நுட்ப சிறப்பை பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.
‘The Grand’ இணையத்தளமானது அதன் அதிசிறந்த mobile responsiveness, நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் உள்ளுணர்வுமிக்க பயனர் இடைமுகம் ஆகியவற்றிற்காகப் பாராட்டப்பட்டது. மேலும், இந்த இணையத்தளமானது சிறந்த டிஜிட்டல் அனுபவத்தை வழங்குவதற்காகவும், நிகழ்நிலை சுற்றுப்பயணங்கள், Online Chat மற்றும் சிரமமற்ற சுமூகமான மற்றும் ஈடுபாடுள்ள இணையவழி பயணத்தை உறுதி செய்ததற்காகவும் பாராட்டப்பட்டது. சொகுசு வாழ்வியலை அதிநவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் Prime Lands Residencies PLCயின் உறுதிப்பாட்டுடன் டிஜிட்டல் பரிணாமம் முழுமையாக ஒத்துப்போகிறது.
“BestWeb.lk 2024இல் இந்த விருதுகளைப் பெறுவதில் நாங்கள் மிகவும் பெருமையடைகிறோம்” என்று Prime Lands Residencies PLCயின் பணிப்பாளர் ஷெஹானா ப்ராஹ்மனகே தெரிவித்தார். “டிஜிட்டல் தளத்தில் சிறந்து விளங்குவதற்கான எங்கள் இடைவிடா முயற்சிக்கு இந்த அங்கீகாரம் ஒரு சான்றாகும். எங்கள் குழுவின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் பலனளித்துள்ளன. மேலும் இந்த விருதுகள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் வழங்கும் இணையவழி அனுபவங்களைத் தொடர்ந்து மேம்படுத்த எங்களுக்கு ஊக்கமளிக்கிறது.” என்றார்.
நிறுவனத்தின் உள்ளக டிஜிட்டல் சந்தைப்படுத்தல், தகவல் தொழிநுட்ப குழுக்கள் மற்றும் நம்பகமான இணையத்தள வடிவமைப்பு பங்காளரான Aidantz ஆகியவற்றின் இணைந்த முயற்சியினூடாக இந்த வெற்றி சாத்தியமானது. இந்த இணைவு ஆனது இன்றைய விவேகமான இணையவழி நுகர்வோரின் எதிர்பார்ப்புக்களை மீறிய டிஜிட்டல் தளத்தை உருவாக்கியுள்ளது. ஒருங்கிணைந்த நிபுணத்துவம் மூலம் Prime Lands Residencies PLCயின் சேவைகளை திறம்பட வெளிப்படுத்தும் பயனர் அனுபவத்தை உருவாக்க முடிந்ததுடன் டிஜிட்டல் ரியல் எஸ்டேட் சந்தையில் புதிய தரநிலைகளை உருவாக்கியது.
Prime Residenciesஇன் முன்னுரிமை இலக்குகளான தொழில்நுட்ப புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர் அனுபவ மேம்பாடு ஆகியவற்றுடன் இந்த இரட்டை மரியாதைகள் இணைந்துள்ளன. வசதிக்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தல், தடையற்ற தொடர்புகளை வழங்குதல் மற்றும் வாடிக்கையாளர் திருப்தியை மேம்படுத்தும் புதுமையான தீர்வுகள் ஆகியவற்றிற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை இது காட்டுகிறது.
வருடாந்தம் நடைபெறும் ‘BestWeb.lk போட்டியானது’, நிறுவனங்களின் டிஜிட்டல் புத்தாக்கம் மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் இலங்கையின் முன்னணி இணையத்தளப் போட்டியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. படைப்பாற்றல், கிராபிக் வடிவமைப்பின் தரம், கலையம்சம், தொழில்நுட்பத் திறன் மற்றும் பொருளடக்கத்தின் புத்தாக்கத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் BestWeb.lk விருதுகள் மதிப்பிடப்படுகின்றன. இணையத்தளங்கள், இணையவழி பார்வையாளர்களின் எதிர்பார்ப்புக்களுடன் திறம்பட எதிரொலிப்பதை உறுதி செய்யும் வகையில் அவற்றின் அழகியல் கவர்ச்சி மற்றும் பயனர் நட்புக்காக ஒரு திறமையான குழுவால் கடுமையாக மதிப்பிடப்படுகின்றன.
மேலும் தகவலுக்கு, www.thegrand.com.lk ஐப் பார்வையிடவும் மற்றும் டிஜிட்டல் யுகத்தில் சொகுசு வாழ்வியலை மறுவரையறை செய்யும் விருது பெற்ற இணையத்தள அனுபவத்தை பெறவும்.