ரணிலின் திட்டத்தை தொடர அநுர அரசு முடிவு!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என காணி அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை காணி உறுதிப் பத்திரங்களை பெறாதவர்கள் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம். பெறப்பட்ட விண்ணப்பங்களின்படி இதுவரை 20,000 காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுவரை ஒரு இலட்சத்து பத்தாயிரம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக காணி அபிவிருத்தி திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
20 இலட்சம் பேருக்கு காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் வேலைத்திட்டம் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ரணில் விக்ரமசிங்கவால் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.