Local

அரசியல் நெருக்கடியால் பங்குச்சந்தை வீழ்ச்சி!

அரசியல் நெருக்கடி நிலைமை காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டி ருப்பதாக அரசியல் மற்றும் பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானம் தொடர்பான சிரேஷ்ட விரிவு ரையாளர் டெரன்ஸ் புரசிங்ககருத்துத் தெரிவிக்கையில்,

வெளிநாட்டு முதலீடு, வெளிநாட்டுக் கடன்,சுற்றுலாத்துறையினரின் வருகை உட்பட பல்வேறு விடயங்கள் தடைப்பட்டுள்ளன. பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது. இதுவரை,வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றப்படவில்லை.

ஜனவரிமாதத்தில் அரச செலவுகள் தொடர்பில் பிரச்சினையுள்ளது.இதுபோன்று பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் நாம்சென்றிருக்கின்றோம். அத்தனைக்கும் அடிப்படைக் காரணம்அதிகார மோகமே ஆகும்.தற்போது நாட்டில் பொருளாதார வீழ்ச்சிக்குக்காரணம்அரசியல் ஸ்திரத்தன்மை இன்மையே என்பதில் இரு வேறு கருத்துக்கள் இல்லை-என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading