Features

உடலுக்குள் நுழையும் கண்ணுக்கு தெரியாத தொழில்நுட்ப கருவி

எதிர்கால உலகம் நம் கற்பனைக்கு எட்டாத வேகத்தில் வளர்ந்து வருகிறது. மருத்துவத் துறையில் இன்று பேசப்படும் “Electronic Pills , அறிவியல் புனைகதை திரைப்படங்களில் வருவது போலத் தோன்றினாலும், இது ஒரு நிஜமான மருத்துவத் தொழில்நுட்பத்தையும் தாண்டி இது ஒரு கண்காணிப்பு தொழில்நுட்பம் என்பது பலருக்கு தெரியாத உண்மை.

சமூக வலைதளங்களில் இதைப் பற்றி பரப்பப்படும் தகவல்கள் உண்மையா, அல்லது வெறும் புரளியா? வாருங்கள் விரிவாகப் பார்ப்போம்.

இவை சாதாரண மாத்திரைகள் போல் வடிவமைக்கப்பட்ட நுணுக்கமான “உட்கொள்ளக்கூடிய சென்சார்கள்” (Ingestible sensors) ஆகும்.

சாதாரண மாத்திரை வடிவில் உள்ள இந்த மாத்திரை ஒரு சிறு மணல் துகளை விட சிறிய இந்த சென்சார்கள், வயிற்றுக்குள் சென்றவுடன் செயல்படத் தொடங்கி, மாத்திரை உட்கொள்ளப்பட்டதை ஒரு டிஜிட்டல் சிக்னல் மூலம் உறுதிப்படுத்துகின்றன.

இது நோயாளிகள், குறிப்பாக மனநல சிகிச்சை பெறுபவர்கள், தங்களுக்குத் தேவையான மருந்துகளைச் சரியாக எடுத்துக்கொள்கிறார்களா என்பதை உறுதிப்படுத்தவே வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சமூக வலைதளங்களில் Pfizer நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (Albert Bourla )ஆல்பர்ட் போர்லாவின்( யூதர்) பேச்சின் படி உண்மையில், இது நோயாளி தன் மருந்தைச் சரியாகச் சாப்பிடுவதை உறுதிப்படுத்தும் ஒரு மேம்பட்ட கருவியே கன கூறப்பட்டாலும் இது நோயாளிகளின் நலன் என்ற பெயரில் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் ஒரு கண்காணிப்பு தொழில்நுட்பமே.

2017-ஆம் ஆண்டிலேயே FDA அங்கீகாரம் பெற்ற ‘Abilify MyCite’ போன்ற அமைப்புகள், நோயாளி தன் மருந்தைச் சரியாகச் சாப்பிடுவதை உறுதிப்படுத்தும் ஒரு மேம்பட்ட கருவியே தவிர, இது எந்த வகையிலும் பொதுமக்களைக் கண்காணிக்கும் கருவி அல்ல என கூறப்பட்டு வருகிறது. ஆனால்…

இது வெறும் மருந்து அல்ல; இது ஒரு “Biological chip.
மாத்திரையை விழுங்கிய நொடியில், அது உங்கள் வயிற்றைச் சென்றடைந்து, உங்கள் உடலில் உள்ள ஆசிட்களுடன் வினைபுரிந்து ஒரு டிஜிட்டல் சிக்னலை வெளியிடுகிறது.

இதைக் கொண்டு உங்கள் ஒவ்வொரு அசைவையும், ஒவ்வொரு செயல்பாட்டையும் வெளியில் இருந்து கண்காணிக்க முடியும் என்பது எத்தனை பயங்கரமான உண்மை?

மருந்தைச் சாப்பிட்டதை உறுதிப்படுத்துவது என்ற பெயரில், உங்கள் உடலின் மீதான உங்கள் தனி உரிமை பறிக்கப்பட போகின்றது.

எதிர்காலத்தில் நாம் எதை நோக்கிச் செல்லப் போகிறோம் என்பதற்கான ஒரு எச்சரிக்கை மணி இது.

ஒரு மாத்திரை உங்கள் உடலில் நுழைந்து அது தகவல்களைப் பரிமாறுகிறது என்றால், உங்கள் அந்தரங்கமும் தனிப்பட்ட உடல் ஆரோக்கியமும் இனி யாரிடம் பாதுகாப்பாக இருக்க முடியும்?

இது “டிஜிட்டல் மருத்துவம்” அல்ல, இது ஒரு “டிஜிட்டல் கண்காணிப்பு” (Digital monitoring).

இவ்வாறு ஏற்படுத்தப்பட போகும் அடிமைத்தனம்
இன்று மனநல மருத்துவம் என்ற பெயரில் தொடங்கும் இந்தத் தொழில்நுட்பம், நாளை என்னவாகும்?

ஒருவேளை, எதிர்காலத்தில் ஒவ்வொரு குடிமகனின் அன்றாட நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தவும், யாராவது விதிமீறல்களில் ஈடுபட்டால் அவர்களின் உடல் சிக்னலை வைத்தே அவர்களைப் பிடிப்பதற்கும் இது பயன்படுத்தப்படலாம்.

தொழில்நுட்பம் என்ற பெயரில் நம்மை அடிமைப்படுத்த நடக்கும் இந்த சதிவலை, நம்மை அறியாமலேயே நம் உடலுக்குள்ளேயே நுழையப்போகின்றது.

எதிர்காலம் இங்கே வந்துவிட்டது, ஆனால் நாம் அதற்குத் தயாராக இருக்கிறோமா?” என்ற கேள்விதான் இன்று பலரின் மனதிலும் எழுகிறது.

எந்தவொரு கார்ப்பரேட் நிறுவனமும் ஒரு சேவையையோ அல்லது ஒரு புதிய தயாரிப்பையோ அறிமுகப்படுத்தும் போது, அதன் அடிமட்டத்தில் இருப்பது அந்த நிறுவனத்தின் லாப வளர்ச்சி மட்டுமே.

“வாடிக்கையாளர் நலன்” என்பது ஒரு சந்தைப்படுத்துதல் கருவியாக (marketing tool) மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

டிஜிட்டல் மாத்திரைகள் போன்ற தொழில்நுட்பங்கள் கூட, ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை விட, அந்தத் தரவுகளைச் சேகரிப்பதன் மூலமும், அதைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலமும் நீண்டகாலத்தில் பெரும் லாபத்தை ஈட்டுவதையே இலக்காகக் கொள்கின்றன.

ஒரு தொழில்நுட்பம் “உங்கள் ஆரோக்கியத்திற்காக” என்று சொல்லப்படும்போது, அது உண்மையில் உங்களை ஒரு “கட்டுப்பாட்டுக்குள்” (Digital monitoring) கொண்டு வருவதற்கான வழியாகவே அமைகிறது.

ஒரு பொருளை விற்பதோடு நில்லாமல், அந்தப் பொருளைப் பயன்படுத்துபவரின் தரவுகளை (data) தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம், அவர்கள் அந்த வாடிக்கையாளரின் வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைப் பெறுகிறார்கள்.

இது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு நிரந்தர வருமானத்தையும், சந்தையில் ஏகபோக உரிமையையும் வழங்குகிறது.

கார்ப்பரேட் நிறுவனங்கள் முன்வைக்கும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் பெரும்பாலும் ஒரு வலையின் தொடக்கமே.

“எதிர்காலம் இங்கே வந்துவிட்டது” என்று அவர்கள் சொல்லும்போது, அந்த எதிர்காலம் யாருடைய நலனுக்காக வடிவமைக்கப்பட்டது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சுருக்கமாகச் சொன்னால், அவர்கள் முன்வைக்கும் “நலன்” என்ற சொல்லாடல், அவர்களின் வணிக நோக்கத்தை மறைக்கும் ஒரு திரையே தவிர வேறில்லை.

சுதந்திரமான மனிதர்களாக நாம் பிறந்தோமா அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களின் டிஜிட்டல் பிடியில் சிக்கிய கருவிகளாக மாறப்போகிறோமா?

தொழில்நுட்பத்தின் பெயரால் நம் மீது திணிக்கப்படும் இந்த ரகசியக் கண்காணிப்பைத் தட்டிக் கேட்க வேண்டிய தருணம் இது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading