புதிய Traz SUV மற்றும் ஏழு இருக்கைகள் கொண்ட Alza MPV ஆகியவற்றை Perodua அறிமுகப்படுத்துகிறது
யுனைட்டட் மோட்டார்ஸ் லங்கா பிஎல்சியின் (United Motors Lanka PLC) முழு உரிமையாண்மையைக் கொண்ட துணை நிறுவனமும், இலங்கையில் Perodua வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தருமான யூனிமோ எண்டர்பிரைசஸ் லிமிட்டெட் (Unimo Enterprises Limited), கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் முற்றிலும் புதிய Perodua Traz மற்றும் Perodua Alza ஆகியவற்றை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. ஐந்து இருக்கைகள் கொண்ட Traz SUV மற்றும் ஏழு இருக்கைகள் கொண்ட Alza MPV ஆகியவற்றின் அறிமுகம், உயர் செயல்திறன், பாதுகாப்பு, சௌகரியம், அன்றாடப் பயன்பாடு மற்றும் மலிவு விலை ஆகியவற்றை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இரண்டு தனித்துவமான போக்குவரத்துத் தீர்வுகளுடன் Perodua-இன் உள்ளூர் தயாரிப்பு வரிசையை விரிவுபடுத்துகிறது.
இந்த அறிமுக நிகழ்வில் Perodua Malaysia-இன் பிரதிநிதிகள், யுனைட்டட் மோட்டார்ஸ் லங்கா பிஎல்சி மற்றும் யூனிமோ எண்டர்பிரைசஸ் லிமிட்டெட் ஆகியவற்றின் தலைமைத்துவ அதிகாரிகள், நிறுவனப் பங்காளர்கள், நிதி நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள், ஊடகங்கள் மற்றும் பிற தொழில் துறைப் பங்குதாரர்கள் ஒன்றிணைந்தனர். இலங்கையில் Ativa மற்றும் Myvi அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இது நடைபெற்றுள்ளதுடன், மாறிவரும் வாடிக்கையாளர் வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ப பரந்த அளவிலான நம்பகமான Perodua வாகனங்களை வழங்கும் யூனிமோ எண்டர்பிரைசஸின் மூலோபாயத்தையும் பிரதிபலிக்கிறது.
இந்த மலேசிய உற்பத்தியாளர் 2025-ஆம் ஆண்டில் மலேசியாவில் 359,904 வாகனப் பதிவுகளைப் பதிவுசெய்ததுடன், தனது உள்நாட்டுச் சந்தைப் பங்கை 43.9% என மதிப்பிட்டுள்ளது. இது அந்த வர்த்தகநாமத்தின் பிரமாண்டம், வாடிக்கையாளர் ஏற்பு மற்றும் உற்பத்தி அனுபவத்தை மேலும் வலுப்படுத்துகிறது. இலங்கையில், இந்த உலகளாவிய திறனானது, யுனைட்டட் மோட்டார்ஸ் லங்கா பிஎல்சியின் ஸ்தாபிக்கப்பட்ட வாகனத் துறை நிபுணத்துவம் மற்றும் நாடு தழுவிய விற்பனைக்குப் பிந்தைய ஆதரவால் மேலும் வலுப்படுத்தப்படுகிறது.
Perodua Traz: தனித்துவமான பாதுகாப்பு செயல்திறனால் ஆதரிக்கப்படும் நவீன SUV-இன் பன்முக ஆற்றல்
முற்றிலும் புதிய Perodua Traz, முக்கியத்துவம் அதிகரித்து வரும் கச்சிதமான SUV பிரிவில் இந்த வர்த்தகநாமத்தின் இருப்பை வலுப்படுத்துகிறது. இதன் சமகாலத் தோற்றம், விசாலமான ஐந்து இருக்கைகள் கொண்ட உட்புறம் மற்றும் மாற்றியமைக்கக்கூடிய பிரயாணப்பொதி வசதிகள் ஆகியவை நகர்ப்புறப் பயணங்கள், குடும்பப் பயணங்கள் மற்றும் அன்றாட வாழ்வின் பல்வேறு தேவைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த தயாரிப்பு வடிவத்தில் கிடைக்கும் வசதி அம்சங்களில் பின்புற குளிரூட்டல் வழிகள் மற்றும் kick sensor கொண்ட powered tailgate ஆகியவை அடங்கும். அதே சமயம், இதன் 1.5-லீட்டர் powertrain, அன்றாடப் பயன்பாட்டிற்கான துரிதமான செயல்திறனையும் சிக்கனமான செயல்பாட்டையும் சமநிலைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Traz தயாரிப்பு வடிவத்திற்கு லீட்டர் ஒன்றுக்கு 21.3 கி.மீ எரிபொருள் திறன் கிடைப்பதாக Perodua தெரிவித்துள்ளது. இந்த தயாரிப்பு வடிவம் ஐந்து நட்சத்திர ASEAN NCAP தர மதிப்பீட்டையும் பெற்றுள்ளது. ASEAN NCAP-இன் அறிக்கை, மதிப்பீடு செய்யப்பட்ட அனைத்து தயாரிப்பு வடிவங்களிலும் தரநிலையாகப் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்களில் ஆறு காற்றுப்பைகள் (airbag), வாகன நிலைத்தன்மைக் கட்டுப்பாடு, நகரம், நகரங்களுக்கு இடையேயான மற்றும் பாதசாரிகளுக்கான தானியங்கி அவசர நிறுத்தல் (பிரேக்கிங்), பார்வைக்கு புலப்படாத இடத்தைக் (blind-spot) கண்டறிதல், பாதை விலகல் எச்சரிக்கை, முன்னோக்கிய மோதல் எச்சரிக்கை, பாதையில் தொடர்ந்து இருக்க உதவும் அமைப்பு மற்றும் ISOFIX குழந்தைகள் இருக்கை பிடிமானங்கள் ஆகியவற்றை அடையாளம் காட்டுகிறது.
Perodua Alza: குடும்ப மற்றும் வணிகப் பயன்பாட்டிற்கான நெகிழ்வான ஏழு இருக்கைகள் கொண்ட வசதி
Perodua Alza என்பது, சுலபமாக கையாளும் திறன் அல்லது செயல்திறனில் எவ்விதமான விட்டுக்கொடுப்பும் இல்லாமல், உண்மையான பயணிகளின் இடவசதியை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு பல்துறை ஆற்றலுடன் ஏழு இருக்கைகள் கொண்ட MPV ஆகும். நெகிழ்வான இருக்கை அமைப்பு, பயணிகளுக்கும் பொருட்களுக்கும் இடையில் உட்புறத்தை மாற்றியமைக்க இடமளிக்கிறது. இது பெரிய குடும்பங்கள், பாடசாலை மற்றும் அலுவலகப் பயணங்கள், ஓய்வுப் பயணங்கள் மற்றும் வணிகப் பயணங்களுக்கு ஏற்றதாக அமைகிறது. மூன்றாவது வரிசையை மடிக்கும்போது, பொருட்கள் வைக்கும் கொள்ளளவு 137 லீட்டரிலிருந்து 498 லீட்டராக அதிகரிக்கிறது. இது தினசரி மற்றும் நீண்ட தூரப் பயணங்களுக்கு பயனுள்ள நெகிழ்வுத்தன்மையை சேர்க்கிறது.
D-CVT transmission உடன் இணைக்கப்பட்ட 1.5-லீட்டர் Dual VVT-i இயந்திரம் மூலம் இயக்கப்படும் Alza, உற்பத்தியாளரால் குறிப்பிடப்பட்டபடி லீட்டர் ஒன்றுக்கு 22.0 கி.மீ. வரை எரிபொருள் திறனை வழங்குகிறது. இது ஐந்து நட்சத்திர ASEAN NCAP தரமதிப்பீட்டையும் கொண்டுள்ளது. மதிப்பீடு செய்யப்பட்ட Alza-இல், ஆறு காற்றுப்பைகள், வாகன நிலைத்தன்மைக் கட்டுப்பாடு, anti-lock braking, தானியங்கி அவசரகால பிரேக்கிங் மற்றும் முன், பின் இருக்கை ஆசனப்பட்டி அணிவித்தல் நினைவூட்டிகள் ஆகியவை இடம்பெற்றிருந்தன. இவை, குடும்பத்தை மையமாகக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு சுயாதீனமாக மதிப்பிடப்பட்ட நம்பிக்கையை வழங்கின.
“இலங்கை வாகன ஓட்டிகளுக்குக் கிடைக்கும் தெரிவுகளை விரிவுபடுத்துவதில் Traz மற்றும் Alza ஆகியவற்றின் வருகை மற்றொரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது. இன்றைய வாடிக்கையாளர்கள் வாகனத்தை வாங்கும்போதான விலையைத் தாண்டி, அன்றாடச் செலவுகளைக் கட்டுப்படுத்த உதவும் எரிபொருள் திறன், நடைமுறைக்கு ஏற்ற இடவசதி மற்றும் நம்பகமான விற்பனைக்குப் பிந்தைய சேவை ஆகியவற்றை எதிர்பார்க்கிறார்கள். இவ்விரு தயாரிப்பு வடிவங்களும் அந்தத் தேவைகளை வெவ்வேறு விதங்களில், அதே சமயம் ஒன்றையொன்று பூர்த்தி செய்யும் வகையிலும் நிறைவேற்றுகின்றன.
இதுவரை, இலங்கையில் 20,000-க்கும் மேற்பட்ட Perodua வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2025-இல் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதிலிருந்து, நாங்கள் சுமார் 3,000 வாகனங்களை விற்பனை செய்துள்ளோம்; இது இலங்கை வாடிக்கையாளர்களுக்கு இந்த வர்த்தகநாமத்தின் மீதுள்ள வலுவான நம்பிக்கையைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. Perodua-வின் நிரூபிக்கப்பட்ட உற்பத்தித் திறன் மற்றும் யுனைட்டட் மோட்டார்ஸ் குழுமத்தின் பரந்த விற்பனை மற்றும் சேவை வலையமைப்பின் ஆதரவுடன், Traz மற்றும் Alza ஆகியவை இலங்கை குடும்பங்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடையே இந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,” என்று யுனைட்டட் மோட்டார்ஸ் லங்கா பிஎல்சியின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரியும் மற்றும் நிறைவேற்றுப் பணிப்பாளருமான திரு. சானக யட்டவர அவர்கள் தெரிவித்தார்.
நாடு முழுவதும் வியாபித்துள்ள வலுவான கட்டமைப்பின் ஆதரவு
Perodua வாடிக்கையாளர்களுக்கு ஹைட்பார்க் கோர்ணர், கண்டி, குருணாகல், இரத்தினபுரி மற்றும் மாத்தறை ஆகிய இடங்களில் உள்ள விற்பனையகங்கள் மூலம் சேவைகள் வழங்கப்படுகின்றன. ஹைட்பார்க் கோர்ணர், உறுகொடவத்தை, இரத்மலானை, இரத்தினபுரி, மாத்தறை, கண்டி, குருணாகல், மட்டக்களப்பு, அனுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை உள்ளடக்கிய பரந்த கட்டமைப்பின் மூலம் விற்பனைக்குப் பிந்தைய சேவைகள் கிடைக்கின்றன. அங்கீகரிக்கப்பட்ட வழிமுறைகள் வாயிலாக, பயிற்சி பெற்ற தொழில்நுட்ப நிபுணத்துவம், பராமரிப்பு ஆதரவு மற்றும் அசல் உதிரிப்பாகங்கள் ஆகியவற்றை இக்கட்டமைப்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
எரிபொருள் திறன் கொண்ட கச்சிதமான hatchback ரகமான Axia, விசாலமான மற்றும் சிக்கனமான கச்சிதமான sedan ரகமான Bezza, 1,000cc turbocharged கச்சிதமான SUV ரகமான Ativa, எடுப்பான மற்றும் சிறந்த செயல்திறன் கொண்ட hatchback ரகமான Myvi, நடைமுறைக்கு ஏற்ற 7 இருக்கைகள் கொண்ட SUV ரகமான Aruz, விசாலமான 7 இருக்கைகள் கொண்ட MPV ரகமான Alza மற்றும் பல்துறை பயன்பாட்டிற்கு ஏற்ற 1.5-லீட்டர் SUV ரகமான Traz ஆகியவற்றுடன், இப்போது இலங்கையில் விரிவான வாகனத் தொகுப்பை Perodua வழங்குகிறது.
ரூ. 8.8 மில்லியன் முதல் ரூ. 20 மில்லியன் வரையிலான விலையில் கிடைக்கும் இந்த வாகனத் தொகுப்பு, பல்வேறு வாகனப் பிரிவுகளில் மலிவு விலையிலான மற்றும் சிறந்த மதிப்புமிக்க போக்குவரத்துத் தீர்வுகளை வழங்குகிறது. அனைத்து Perodua வாகனங்களும் ஐந்து ஆண்டுகள் அல்லது 150,000 கிலோமீட்டர்கள் (எது முதலில் வருகிறதோ அதுவரை) வரையிலான விரிவான உற்பத்தியாளர் உத்தரவாதத்துடன் வருகின்றன. இது வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும் மனநிறைவையும் அளிக்கிறது.
விரிவுபடுத்தப்பட்ட இந்தத் தயாரிப்பு வரிசையின் மூலம், தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் வணிகங்களின் பல்வேறு போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்ய யூனிமோ எண்டர்பிரைசஸ் லிமிட்டெட் நிறுவனம் சிறப்பாகத் தயாராக உள்ளது. நடைமுறைக்கு ஏற்ற வடிவமைப்பு, பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் நீண்ட காலப் பயன்பாட்டு மதிப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்ட ‘Building Cars, People First’ (கார்களை உருவாக்குதல் – மக்களுக்கு முன்னுரிமை) எனும் தத்துவத்தை இந்தத் தயாரிப்பு வரிசை பிரதிபலிக்கிறது.
வாடிக்கையாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட Perodua விற்பனையகங்களுக்குச் சென்று புதிய Perodua Traz மற்றும் Alza ஆகியவற்றை நேரில் கண்டு அனுபவிக்கலாம்; அல்லது கூடுதல் விபரங்களுக்கு 0117 565 170 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொள்ளலாம். அறிமுகச் சலுகையாக, முதல் 50 வாடிக்கையாளர்கள் Perodua Traz (Body Kit உடன்) வாகனத்தை ரூ. 19,950,000/-க்கும், Perodua Traz (Body Kit இல்லாமல்) வாகனத்தை ரூ. 19,200,000/-க்கும் அல்லது Perodua Alza வாகனத்தை ரூ. 19,950,000/-க்கும் பெற்றுக்கொள்ளலாம். (அனைத்து விலைகளிலும் வற் வரி அடங்கும்).
— முற்றும் —

You must be logged in to post a comment.