40 ஆண்டுகள் காத்திருந்த காதல்.. 60 வயதில் திருமணம்…!!!
மனசை நெகிழ வைக்கும் ஒரு உண்மைக் கதை!
நாற்பது வருஷத்துக்கு முன்னாடி பள்ளி பருவத்தில் மலர்ந்த ஒரு காதல், இப்போ 60 வயதில் நிறைவேறியிருக்கு.
கேரளா கொல்லத்தை சேர்ந்தவர்கள் தான் ஜெயப்பிரகாஷ் – ரஷ்மி. சின்ன வயசுல ஒருத்தர் மேல ஒருத்தர் உயிரா இருந்திருக்காங்க. ஆனா வாழ்க்கை அவங்களை வேற வேற திசையில் பிரிச்சுடுச்சு. ரஷ்மிக்கு பெரியவங்க பார்த்து திருமணம் நடந்தது, ஜெயப்பிரகாஷ் வேலைக்காக வெளிநாடு போய் அங்கேயே குடும்பமாக செட்டில் ஆகிட்டார்.
இரண்டு பேருமே தங்களோட வாழ்க்கை துணையோடு சந்தோஷமா வாழ்ந்திருக்காங்க. விதியின் விளையாட்டு, ரஷ்மி தன்னோட கணவரை 10 வருஷத்துக்கு முன்னாடியும், ஜெயப்பிரகாஷ் தன்னோட மனைவியை 5 வருஷத்துக்கு முன்னாடியும் இழந்துட்டாங்க.
அதுக்கு பிறகு தான் ஒரு அதிசயம் நடந்தது. ஒரு மலையாள குறும்படத்தில் நடித்துக் கொண்டிருந்த ரஷ்மியை பார்த்து ஜெயப்பிரகாஷ் அடையாளம் கண்டுபிடித்துள்ளார். உடனே தயங்காமல் அவரது குடும்பத்தை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். பல வருடங்களுக்கு பிறகும் அந்த பழைய பாசம் அப்படியே இருந்திருக்கிறது.
இதில் ரொம்பவே ஸ்பெஷலான விஷயம் என்னன்னா, இவங்க ரெண்டு பேரோட கல்யாணத்தையே இவங்க பிள்ளைகளும் மருமகன்களும் தான் முன்னின்று நடத்தி வைத்திருக்கிறார்கள். பெற்றோருக்கு துணை வேணும்னு அவங்களே மனசார இந்த முடிவை எடுத்திருக்காங்க.
சமீபத்தில் கொச்சியில் மிக எளிமையான முறையில் இவர்களது திருமணம் நடந்துள்ளது. காதலுக்கு வயதும் இல்லை, காலமும் இல்லை என்பதை இவர்கள் மீண்டும் நிரூபித்து விட்டார்கள்.
உண்மையான அன்பு காத்திருக்கும், கடைசியில் ஜெயிக்கவும் செய்யும்.
#TrueLoveNeverFails #SecondChanceAtLife #InspiringLoveStory #KeralaDiaries

You must be logged in to post a comment.