Jobs

இலங்கையின் மிகச்சிறந்த மாம்பழச் சுவையுடைய யோகட் தயாரிப்பை அறிமுகம் செய்த  அம்பேவெல நிறுவனம் 

 

உயர்தர பால் பொருட்களுக்கான இலங்கையின் அளவுகோலாகத் திகழும் அம்பேவெல, தனது புதிய மாம்பழச் சுவையுடைய யோகட் தயாரிப்பை அறிமுகம் செய்வதன் மூலம், தயாரிப்புப் புத்தாக்கத்தில் மீண்டும் ஒருமுறை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது மாம்பழத்தின் செறிவான, உண்மையான சுவையையும், அம்பேவெல யோகட்டின் பாற் தன்மையையும் ஒன்றிணைக்கிறது.

 

அம்பேவெலவின் சொந்தப் பண்ணைகளிலிருந்து பெறப்பட்ட தூய்மையான, புத்தம் புதிய பாலில் இருந்து தயாரிக்கப்படும் இந்த புதிய மாம்பழச் சுவையுடைய யோகட், தரம், புத்துணர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றில் அந்நிறுவனத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. இலங்கையர்களுக்குப் பிடித்தமான மாம்பழத்தின் செறிவான சுவையுடன் கூடிய இந்த சுவையான யோகட், சுவைமிகுந்த அனுபவத்தையும் ஊட்டச்சத்தையும் கச்சிதமாகச் சமநிலைப்படுத்தும் ஒரு புத்துணர்ச்சியூட்டும் மற்றும் ஆரோக்கியமான விருந்தாக அமைகிறது.

 

வசதியான 80 கிராம் கோப்பையில் கிடைக்கும் இது, பயணத்தின்போது உண்ணும் சிற்றுண்டியாகவும், இடைவேளையொன்றின் போது இனிப்பு ஆகாரமாகவும், அல்லது அன்றாடம் சுவைமிகுந்த விருந்தாகவும் உட்கொள்வதற்கு மிகவும் ஏற்றது. இதன் மென்மையான, பால் போன்ற தன்மையும், செறிவான மாம்பழச் சுவையும், அனைத்து வயதினரையும் கவரும் ஒரு தவிர்க்க முடியாத தேர்வாக அமைகிறது.

 

2009-இல் தனது புகழ்பெற்ற கெட்டியான யோகட் (Set Yoghurt) வகையை அறிமுகப்படுத்தியது முதல், உயர்தரத்திற்கான தனது அர்ப்பணிப்பின் மூலம் இலங்கை நுகர்வோரின் நம்பிக்கையை அம்பேவெல பெற்றுள்ளது. அந்த பாரம்பரியத்தின் அடிப்படையில், மாறிவரும் நுகர்வோர் விருப்பங்களுக்கு ஏற்ப தனது சுவையூட்டப்பட்ட யோகட் வகைகளை இந்நிறுவனம் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. மாம்பழச் சுவை கொண்ட யோகட் தயாரிப்பின் அறிமுகமானது, இலங்கையர்களின் விருப்பமான உள்ளூர் சுவைகளை நவீன பால் உற்பத்தித் தொழில்நுட்பத்துடன் இணைக்கும் அம்பேவெலவின் திறனைப் பிரதிபலிக்கிறது. இது உயர்தர யோகட் பிரிவில் அதன் நிலையை மேலும் வலுப்படுத்துகிறது.

 

தனது தயாரிப்பு வரிசையில் இந்த புதிய வரவைச் சேர்ப்பதன் மூலம், சிறந்த சுவை, உயர்தரம் மற்றும் நம்பகமான ஊட்டச்சத்து ஆகியவற்றை உள்ளடக்கிய தயாரிப்புகளை வழங்குவதன் வாயிலாக யோகட் அனுபவத்தை அம்பேவெல தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. வெறும் யோகட் மட்டுமல்லாமல், அம்பேவெலவை நாட்டின் மிகவும் நம்பகமான பால் உற்பத்தி நிறுவனமாக மாற்றிய அதே அக்கறை மற்றும் சிறப்பான தரத்துடன் தயாரிக்கப்பட்ட, இலங்கையர்கள் விரும்பும் சுவைகளை அம்பேவெல மாம்பழச் சுவை கொண்ட யோகட் கொண்டாடுகிறது.

 

மாம்பழத்தின் சுவை கலந்த அம்பேவெல யோகட்டின் மென்மையான மற்றும் செழுமையான சுவையை அனுபவியுங்கள். உண்மையான பழம், உயர்தர பால் மற்றும் அன்றாட மகிழ்ச்சி ஆகியவை ஒன்றிணையும் அம்பேவெல மாம்பழச் சுவை கொண்ட யோகட்டை இன்றே சுவைத்து அதனை ருசியை அறியுங்கள்.

 

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading