‘செரமி வேர்ல்ட்’ மூலம் சிறுவர்களுக்குக் கல்வி கலந்த பொழுதுபோக்கை வழங்கிய பேபி செரமி
ஒக்டோபர் 01 முதல் 04 வரை ஹெவ்லொக் சிட்டி மோலில் (Havelock City Mall) நடைபெற்ற ‘கிட்ஸ் லேண்ட் 2026’ (Kids Land 2026) நிகழ்வின் பிரதான பங்காளர் எனும் வகையில் பேபி செரமி தனது அற்புதமான ‘செரமி வேர்ல்ட்’ (Cheramy World) உலகத்தை, டிஜிட்டல் திரையிலிருந்து நிஜ உலகிற்குக் கொண்டு வந்தது. இந்த மகிழ்ச்சிகரமான நிகழ்வானது சிறுவர்களுக்குப் பிடித்தமான ‘ஃபன்டைம் பட்டீஸ்’ (Funtime Buddies) கதாபாத்திரங்களை நேரில் சந்திப்பதற்கும், கற்பனைத்திறன், கதை சொல்லுதல் மற்றும் விளையாட்டின் மூலமான கற்றல் ஆகியவற்றை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு உலகத்தை அனுபவிப்பதற்கும் வாய்ப்பளித்தது. புதுப்பிக்கப்பட்ட பேபி செரமி ஃபன்டைம் கொலோன் (Baby Cheramy Funtime Cologne) வகைகளுடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்ட ‘செரமி வேர்ல்ட்’ ஆனது, சிறுவர்களுக்காக இலங்கையில் முதன்முறை உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கல்வியுடனான பொழுதுபோக்கு (edutainment) உலகமாகும். இது Lucky Ducky, Cuddly Bunny, Angel Fairy, Star Dust, Magic Mist ஆகியோரை ஒன்றிணைக்கிறது. அத்துடன் ஒவ்வொரு பிரியமான கதாபாத்திரமும் குழந்தை பருவக் கற்றல் மற்றும் வளர்ச்சியின் வெவ்வேறு பரிமாணத்திற்கு உத்வேகம் அளிக்கிறது.
மகிழ்ச்சியாக இருக்கும்போது சிறுவர்கள் மிகச் சிறப்பாகக் கற்றுக் கொண்டு வளர்கிறார்கள் எனும் ‘செரமி வேர்ல்ட்’ இன் பின்னணியில் உள்ள யோசனைக்கு, இந்த வேடிக்கை நிறைந்த அனுபவம் உயிரூட்டிய அதே நேரத்தில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் அன்றாட சாகச செயற்பாடுகளில் ஒரு நம்பகமான நண்பனை அடைந்து பயனடைகிறார்கள். பேபி செரமியைப் பொறுத்தவரை, இந்த நிகழ்வானது டிஜிட்டல் கதை சொல்லலுக்கு அப்பால் ஒரு படியை எடுத்து வைத்ததை குறிக்கிறது. குடும்பங்கள் பகிரப்பட்ட செயற்பாடுகள் மற்றும் நிஜ உலக அனுபவங்கள் மூலம் கதாபாத்திரங்களுடன் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்பை வழங்கியது. ஒரு குறியீட்டை ஸ்கேன் செய்து, தங்களுக்குப் பிடித்தமான ‘ஃபன்டைம் பட்டி’ (Funtime Buddy) உடன் ஒரு கதையை உருவாக்கி, அதன் தனித்துவமான கதையை அச்சிடப்பட்ட நினைவுப் பொருளாக பெற ‘மை செரமி வேர்ல்ட்’ (My Cheramy World) முக்கிய அம்சமாக குடும்பங்களுக்கு அமைந்தது.
அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், ஐந்து இராச்சியங்களை கொண்டு உருவாக்கப்பட்ட ‘A Tale of Fun & Learning in Cheramy World’ எனும் பங்கேற்புடனான செயல்நூலும் சிறுவர்களுக்காக வெளியிடப்பட்டது. இந்த கையேடு சிறந்த ஒழுக்க விழுமியங்கள், குழுப்பணி, ஆகியவற்றை இசை, மகிழ்ச்சி, எழுத்துகள், வண்ணங்கள் மூலம் கற்றலை ஈர்க்கும் வழியில் அமைகிறது. இதில் செ (Che) மற்றும் ரமி (Ramy) சகோதரர்கள் ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் சிறுவர்களை வழிகாட்டினர்.
நிகழ்வில் சிறுவர்கள் ‘A Tale of Fun & Learning in Cheramy World’ எனும் செயற்பாட்டு கையேட்டுடன், செ மற்றும் ரமியின் வழிகாட்டலுன், ஒவ்வொரு ஃபன்டைம் பட்டி இராச்சியத்தின் ஊடாகவும் பயணம் செய்து, சிறந்த விழுமியங்கள், குழுப்பணி, மொழி மற்றும் வண்ணங்களை, இசையுடன் நகர்ந்து, கனிவான வார்த்தைகளை பயிற்சி செய்வது முதல் ஒலிகள் எழுப்புதல் மற்றும் வார்த்தைகளுடன் விளையாடுதல், என பல்வேறு சாகசங்கள் மூலம் வழி கண்டுபிடித்தல் மற்றும் வானவில்லை வண்ணமயமாக்குவது வரை ஒவ்வொரு இராச்சியத்திலும் வித்தியாசமான அனுபவத்தை பெற்றனர்.
நிகழ்வின் போது, Cuddly Bunny மற்றும் Lucky Ducky ஆகியன தோன்றி, குடும்பங்களை வரவேற்று புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தன. Kids Land மேடையில் செரமி வேர்ல்ட் எண்ணக்கரு கொண்ட விளையாட்டுகள் மற்றும் வண்ணமயமான பலூன்களின் வீழ்ச்சி ஆகியன உற்சாகத்தை மேலும் அதிகரித்தன. அந்த வகையில் குறித்த இடம் இசையாலும் சிரிப்பாலும், ஆற்றலாலும் சிறுவர் தினக் கொண்டாட்டத்தை முழுமைப்படுத்தின. பேபி செரமியின் டிஜிட்டல் பிரசாரத்தை நிஜ உலகத்திற்குக் கொண்டுவந்த இந்த நிகழ்வானது, ஒன்லைன் வெற்றியாளர்கள் Kids Land ஐப் பார்வையிட்டு பேபி செரமி பரிசுப் பொதிகளை நேரில் பெற்றுக் கொள்ள வழிவகுத்தது. திரைக்குப் பின்னால் இருந்த குடும்பங்களுக்கு ஒரு டிஜிட்டல் தருணத்தை மறக்க முடியாத அனுபவமாக இது மாற்றியது.
குடும்பங்கள் ஃபன்டைம் நறுமணங்களைச் சோதித்துப் பார்க்கும் வாய்ப்பையும் பெற்றதோடு, பங்கேற்கும் சிறுவர்களுக்கு ஃபன்டைம் கொலோன் பரிசுப் பொதியும் வழங்கப்பட்டது. இது கடந்த ஓகஸ்ட் மாதம் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்ட நறுமண வகைகளை குடும்பங்களுக்கு அறிமுகப்படுத்தியது. ஃபன்டைம் பட்டிஸ் இனால் ஈர்க்கப்பட்ட இந்த கொலோன்கள், சிறுவர்களின் அன்றாட சாகசங்களுக்கு நறுமணமானது மேலதிக மகிழ்ச்சியைத் தரும் எனும் பேபி செரமியின் ‘Joy Booster’ நம்பிக்கையைப் பிரதிபலிக்கின்றன. இந்த தயாரிப்புகள் தோல் மருத்துவவர்களால் சோதிக்கப்பட்டுள்ளதோடு, சர்வதேச நறுமண சங்கத்தால் (IFRA) நிர்ணயிக்கப்பட்ட பாதுகாப்பு தரங்களுக்கும் இணங்குகிறது.
இலங்கையின் முதலிடத்தில் உள்ள குழந்தை பராமரிப்பு வர்த்தகநாமமான பேபி செரமி, குழந்தை பராமரிப்புக்கான பல வருட அர்ப்பணிப்பு மூலம் பெற்றோர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. அந்த நம்பிக்கையானது செரமி வேர்ல்ட் உடன் இயற்கையாகவே நீண்டு செல்கின்றது. கற்றல், படைப்பாற்றல் மற்றும் விளையாட்டுக்கான பரிச்சயமான மற்றும் பாதுகாப்பான இடத்தை இது குடும்பங்களுக்கு வழங்குகிறது. ஃபன்டைம் கொலோன் வகைகளின் தரம் மற்றும் பாதுகாப்பு நற்சான்றிதற்கள் இந்த அர்ப்பணிப்பிற்கு மேலும் வலுவூட்டுகின்றன.
எதிர்வரும் வருடத்தில் மேலும் பல செயற்பாடு சார்ந்த பங்கேற்புடனான கையேடுகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு செயற்பாடுகள் மூலம் செரமி வேர்ல்டினை டிஜிட்டல் வெளிக்கு அப்பால் கொண்டு செல்ல பேபி செரமி திட்டமிட்டுள்ளது. சிறுவர் தின செயற்பாட்டு கையேட்டின் அடிப்படையில், இந்த முயற்சிகள் சிறுவர்கள் தங்களுக்குப் பிடித்தமான ஃபன்டைம் பட்டிஸ் உடன் இணைந்து செயற்படுவதற்கும், கற்றுக் கொள்வதற்கும் விளையாடுவதற்கும் புதிய வழிகளைக் கண்டறிவதற்கும் அதிக வாய்ப்புகளை உருவாக்கும்.
Hemas Consumer Brands பற்றி
இலங்கையின் இல்லங்கள் மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணியில் திகழும் Hemas Consumer Brands நிறுவனம், குடும்பங்கள் ஒரு சிறந்த எதிர்காலத்தை நோக்கிய இலட்சியத்தை அடைவதை வலுவூட்டுவதில் கவனம் செலுத்துகிறது. உள்ளூர் நுண்ணறிவுகளைப் பயன்படுத்தி புத்தாக்கங்களைப் புகுத்துவதிலும், நுகர்வோரை மையமாகக் கொண்ட முன்மொழிவுகளை உருவாக்குவதிலும் இந்நிறுவனம் பெருமிதம் கொள்கிறது. நோக்கத்தை அடிப்படையாக கொண்ட தங்களது வர்த்தகநாமங்களை இலங்கையில் நம்பகமான வீட்டுப் பெயர்களாக நிலைநிறுத்த இவ்விடயம் உதவியுள்ளது. இலங்கை நுகர்வோர் பற்றிய ஆழமான புரிதல் மற்றும் தமது தயாரிப்புகள் மூலம் சிறந்த தரம் மற்றும் மதிப்பை வழங்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் செயற்படும் Hemas Consumer Brands நிறுவனம், நாடு முழுவதிலும் உள்ள சமூகங்களின் வாழ்க்கையை தொடர்ந்து வளப்படுத்தி வருகிறது.

You must be logged in to post a comment.