இலங்கைக்கு அடுத்த மூன்று ஆண்டுகளில் ஏற்படவுள்ள சிக்கல்
பொருளாதார வளர்ச்சி வேகத்தில் எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் வீழ்ச்சி ஏற்படும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பொருளாதார ஆய்வாளர்கள் சங்கம் நேற்று(18.11.2026) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அதன் தலைவர் பேராசிரியர் சிறிமேவன் கொலம்பகே, கடந்த சில வருடங்களாகக் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி வேகத்தை தொடர்ச்சியாகப் பேணிச் செல்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
கடந்த இரண்டு மூன்று வருடங்களில் பொருளாதார வளர்ச்சி வேகம் 5வீதம் அளவில் இருந்தது. எனினும், இந்த வளர்ச்சியைத் தொடர்ந்து பேணிச் செல்வதில் சிக்கல் நிலை காணப்படுகின்றது.

இந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் 3வீதத்திற்கும் 4வீதத்திற்கும் இடைப்பட்டதாகக் காணப்படுவது புள்ளிவிபரங்களின் ஊடாகத் தெளிவாகின்றது. அத்துடன், 2027, 2028, 2029 ஆகிய ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி வேகம் 3 வீதமாகக் குறையும்.
எனினும், இவற்றைத் தொடர்ந்து பேணிச் செல்வது கடினமாக இருந்தது. கடந்த 40 – 50 வருடங்களைப் பார்த்தால், நாம் தொடர்ந்தும் எமது முதலீடுகளை அதிகரித்தோம். ஆனால், முதலீடுகளை அதிகரிக்க அதிகரிக்க நாம் அந்த வளர்ச்சியைப் பெற்றுக்கொள்ள வேண்டிய பொருளாதார வேகம் குறைகிறது. இன்றைய நிலையில் பொருளாதாரம் ஒரு குறிப்பிட்ட எல்லையை அடைந்துள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

You must be logged in to post a comment.