Aleph உடனான ஒரு பிரத்தியேக மீள்விற்பனையாளர் கூட்டாண்மை மூலம், 44 நாடுகளில் தனது ChatGPT விளம்பரங்களின் இருப்பை OpenAI விரிவுபடுத்துகிறது
Aleph மற்றும் OpenAI இடையிலான ஒரு பிரத்தியேக மீள்விற்பனையாளர் கூட்டாண்மை மூலம், 44 நாடுகளில் தனது ChatGPT விளம்பரங்களின் இருப்பு விரிவுபடுத்தப்படுகிறது. இன்று முதல், லத்தீன் அமெரிக்காவில் உள்ள 14 சந்தைகள், ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் உள்ள 16 சந்தைகள், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் உள்ள 10 சந்தைகள், மற்றும் ஆசிய-பசிபிக்கில் உள்ள 4 சந்தைகள் ஆகியவற்றில் உள்ள வர்த்தகநாமங்கள் மற்றும் விளம்பர முகவர் நிறுவனங்கள், OpenAI-இன் பிரத்தியேக மீள்விற்பனையாளரான Aleph மூலம் உள்ளூரில் ஒப்பந்தம் செய்துகொள்ளவும், பணம் செலுத்தவும் மற்றும் ஆதரவைப் பெறவும் முடியும்.
ChatGPT என்பது ஒரு புதிய வகை விளம்பரப்படுத்தல் சூழலாகும், கற்றுக்கொள்ளவும், ஆராயவும் மற்றும் முடிவுகளை எடுக்கவும் இதனை மக்கள் நாடுகிறார்கள். Aleph நிறுவனத்தைப் பொறுத்தவரை, OpenAI உடனான இந்தக் கூட்டாண்மை என்பது, செயற்கை நுண்ணறிவு சகாப்தத்தின் வரையறுக்கும் தயாரிப்புகளில் ஒன்றான ChatGPT உடன் இந்தச் சந்தைகளில் உள்ள வணிகங்களை இணைப்பதாகும். விளம்பரதாரர்களுக்கு, இது உள்ளூர் அணிகள் மற்றும் அதன் சொந்த கட்டணம் செலுத்தல் உள்கட்டமைப்பைக் கொண்ட ஒரு கூட்டாளர் மூலம் ChatGPT விளம்பரங்களை வாங்குவதைக் குறிக்கிறது.
“செயற்கை நுண்ணறிவு (AI) வணிகங்களுக்கு மக்களுடன் தொடர்புகொள்வதற்கான ஒரு புதிய வழியை வழங்குகிறது. இன்று முதல், 44 சந்தைகளில் உள்ள விளம்பரதாரர்கள், தங்கள் மொழியைப் பேசும், உள்ளூர் நாணயத்தில் கட்டணப் பட்டியலை வழங்கும் மற்றும் கடன் வசதியை அளிக்கும் உள்ளூர் அணியின் மூலம் OpenAI உடன் இணைந்து பணியாற்றலாம். உலகளாவிய தொழில்நுட்பத்தை உள்ளூர் வளர்ச்சிக்கான வாய்ப்பாக மாற்றுவதே Aleph நிறுவனத்தின் சிறப்பம்சமாகும்.” – காஸ்டன் டராடுடா, ஸ்தாபகர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, Aleph.
Aleph உடன் இணைந்து செயற்படும் வர்த்தகநாமங்கள் மற்றும் விளம்பர முகவர் நிறுவனங்கள், ஒவ்வொரு சந்தையிலும் உள்ள Aleph அணிகளிடமிருந்து அறிமுகம் மற்றும் முதல் நிலை ஆதரவைப் பெறுவதோடு, உள்ளூரிலேயே ஒப்பந்தம் செய்து அதற்கான கட்டணப் பட்டியலையும் பெறுகின்றன. இந்த ஒப்பந்தம் 44 சந்தைகளை உள்ளடக்கியுள்ளது:
- லத்தீன் அமெரிக்கா (14): ஆர்ஜென்டினா, பொலிவியா, சிலி, கொலம்பியா, கோஸ்டா ரிகா, டொமினிகன் குடியரசு, ஈக்குவடோர், எல் சால்வடோர், குவாத்தமாலா, பனாமா, பராகுவே, பெரு, புவேர்ட்டோ ரிக்கோ மற்றும் உருகுவே
- ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா (16): அஸர்பைஜான், பல்கேரியா, குரோஷியா, சைப்பிரஸ், செக்கியா, எஸ்தோனியா, ஹங்கேரி, கஸகஸ்தான், லத்வியா, லித்துவேனியா, ருமேனியா, சேர்பியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, உக்ரைன் மற்றும் உஸ்பெகிஸ்தான்
- மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா (10): எகிப்து, கென்யா, குவைத், மொரோக்கோ, நைஜீரியா, கட்டார், சவுதி அரேபியா, தென்னாபிரிக்கா, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம்
- ஆசியா-பசிபிக் (4): பங்களாதேஷ், கம்போடியா, ஹொங்கொங் (ஏற்றுமதி வணிகச் சந்தை) மற்றும் இலங்கை
இந்த சந்தைகளில் உள்ள விளம்பரதாரர்கள் மற்றும் முகவர் நிறுவனங்கள் https://alephdigital.com/OpenAi?utm_source=pr&utm_id=openai&utm_content=apac மூலமாகவும் மற்றும் Aleph நிறுவனத்தின் உள்ளூர் அணிகளைத் தொடர்பு கொண்டும் இது குறித்து மேலும் அறிந்து கொள்ளலாம்.
பதிப்பாசிரியர்களுக்கான குறிப்பு: உக்ரைன் மற்றும் ஹொங்கொங் ஆகியவை ஏற்றுமதி வணிகச் சந்தைகளாகும்.
Aleph நிறுவனம் தொடர்பான விபரங்கள்
அதிவேக வளர்ச்சி கண்டு வரும் 130-க்கும் மேற்பட்ட சந்தைகளில் ஊடகம் மற்றும் கட்டணம் செலுத்தும் தீர்வுகளை விரைவுபடுத்தும் மிகப்பெரிய உலகளாவிய உள்கட்டமைப்பை Aleph இயக்குகிறது. 20 வருட அனுபவம் மற்றும் உலகின் 50-க்கும் மேற்பட்ட முன்னணி டிஜிட்டல் தளங்களுடனான கூட்டாண்மைகளுடன், ஊடகம், கட்டணம் செலுத்துதல் மற்றும் உள்ளூர் சந்தை நிபுணத்துவத்தை இணைத்து, தளங்களையும் வணிகங்களையும் உலகளவில் வேகமாகவும் இணக்கமாகவும் வளரவும் செயல்படவும் Aleph உதவுகிறது. உலகெங்கிலும் 90-க்கும் மேற்பட்ட அலுவலகங்களில் உள்ள அணிகளுடன், உலகளாவிய வலிமையை ஆழமான உள்ளூர் செயல்பாட்டுடன் Aleph ஒருங்கிணைக்கிறது. வணிகத்திற்கு ஏற்படுத்தும் நற்பலன்களுக்கு அப்பால், யுனெஸ்கோவின் Global Skills Academy அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தனது கல்வி முயற்சியான Digital Ad Expert மூலம் டிஜிட்டல் உள்ளடக்கத்தை Aleph ஊக்குவிக்கிறது.

You must be logged in to post a comment.