SLIM தேசிய விற்பனை விருதுகள் 2026 இல் நான்கு வெற்றியாளர்கள் மூலம் சாதனை படைத்தது பெல்வத்த டெய்ரி இண்டஸ்ட்ரீஸ்
மதிப்புமிக்க ‘SLIM National Sales Awards – NSA’ (SLIM தேசிய விற்பனை விருதுகள்) 2026 நிகழ்வில், பெல்வத்த டெய்ரி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Pelwatte Dairy Industries Limited) நிறுவனத்தின் விற்பனைக் குழுவைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்கள், நாட்டின் முன்னணி விற்பனை நிபுணர்களாக அங்கீகரிக்கப்பட்டு, நான்கு பிரிவுகளின் கீழ் ஒரு வெள்ளி மற்றும் மூன்று மெரிட் விருதுகளை வென்று ஒரு முக்கிய சாதனையை பெருமையுடன் கொண்டாடுகிறது.
இலங்கை முழுவதிலும் உள்ள நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 1,500 இற்கும் மேற்பட்ட விற்பனை நிபுணர்களுக்கு மத்தியில், நிறைவேற்று விற்பனை, பிராந்திய முகாாமைத்துவம், விற்பனை ஆதரவு மற்றும் பிராந்திய விற்பனை முகாமைத்துவம் முழுவதும் அடைந்த தனிப்பட்ட திறமைகளை பெல்வத்த நிறுவனத்தின் இந்த நான்கு விருதுகளும் அங்கீகரிக்கின்றன. பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்த விற்பனை நிபுணர்களை அங்கீகரித்து கௌரவிக்கும் தேசிய விற்பனை விருதுகள் நிகழ்வானது, இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தால் (SLIM) முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
விற்பனை நிறைவேற்று பிரிவில் (FMCG – உணவு) ஐ.ஏ. தமித் நிரோஷன் பெரேரா வெள்ளி விருதை வென்றதுடன், பிராந்திய முகாமையாளர் பிரிவில் (FMCG – உணவு) அமில பிரசங்க மாசச்சி மெரிட் வெற்றியாளராக கௌரவிக்கப்பட்டார். மேலதிக விற்பனை ஆதரவு ஊழியர்கள் – முகாமையாளர் மற்றும் அதற்கு மேற்பட்டோர் பிரிவில் அதீஷ மலித் வெலிவிட்ட மெரிட் விருதைப் பெற்றதுடன், பிராந்திய விற்பனை முகாமையாளர் பிரிவில் யு.ஏ. சன்ன தமயந்த பண்டாரவும் மெரிட் வெற்றியாளராக கௌரவிக்கப்பட்டார்.
வாடிக்கையாளர் உறவுகளை வளர்ப்பதற்கும், நிறுவனத்தின் சந்தை இருப்பை வலுப்படுத்துவதற்கும், வணிக வளர்ச்சியை ஆதரிப்பதற்கும் பெல்வத்த நிறுவனத்தின் விற்பனைக் குழுவின் பங்களிப்பு இந்த அங்கீகாரத்தில் பிரதிபலிக்கிறது. இலங்கை முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தகப் பங்காளர்களை ஈடுபடுத்துவதன் மூலம் நிறுவனத்தின் விரிவாக்கத்திலும், நுகர்வோருக்கு தனது பால் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதிலும் இக்குழு முக்கிய பங்கு வகிக்கிறது. அது மாத்திரமன்றி, இலங்கை சந்தைக்கு உயர்தர பால் பொருட்களை வழங்குவதற்கான பெல்வத்த நிறுவனத்தின் அர்ப்பணிப்பிற்கும் அவர்களது முயற்சிகள் ஆதரவளிக்கின்றன.
இலங்கையின் முன்னணி பால் உற்பத்தி நிறுவவனங்களில் ஒன்றான பெல்வத்த, தனது வெற்றியும் சந்தைப் பங்கேற்பும் தனது ஊழியர்களின் திறன்கள் மற்றும் அர்ப்பணிப்பின் மீதே கட்டியெழுப்பப்பட்டுள்ளன என்பதை இது அங்கீகரிக்கிறது. நிறுவனத்தின் மக்களை மையமாகக் கொண்ட கலாசாரமும், தனது வளர்ச்சிப் பயணத்திற்கும் இலங்கை நுகர்வோருக்கு உயர்தர பால் பொருட்களை வழங்கும் பணிக்கும் ஆதரவளிக்கும் உயர் செயல்திறன் கொண்ட விற்பனை நிபுணர்களை உருவாக்குவதில் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான முதலீடும் இந்த நான்கு விருதுகளில் பிரதிபலிக்கின்றன.
இந்த சாதனையானது விற்பனைத் திறமையாளர்களை அங்கீகரித்து கௌரவித்தல் மற்றும் மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்துவதுடன், நிறுவனத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு உந்து சக்தி அளிப்பதிலும் இலங்கையின் பால் தொழிற்துறையில் நிறுவனத்தின் நிலையை உறுதிப்படுத்துவதிலும் பெல்வத்த ஊழியர்கள் வகிக்கும் பங்கையும் வலியுறுத்துகிறது.

You must be logged in to post a comment.