Local

உளவுத்துறை உஷார் நிலையில்!

அரச உளவுத்துறை உஷாராகவே இருக்கின்றது என்றும், அரச உயர்மட்ட பிரமுகர்களின் பாதுகாப்பு குறித்து தீவிரமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் சட்டம், ஒழுங்கு பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார்.

“ பிரமுகர்கள் கொலை சூழ்ச்சித் திட்டம் தொடர்பில் சி.ஐ.டி.யினர் பலகோணங்களில் விசாரணைகளை நடத்திவருகின்றனர். விரைவில் உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் என நம்புகின்றோம்.

நாமல் குமார என்ற நபர் சர்ச்சைக்குரிய நபராக இருக்கிறார். தற்போது இருகுழுக்குளுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருதரப்பினரும் இருவேறு கோணங்களில் கருத்துகளை முன்வைத்துவருகின்றனர். இவை குறித்து பாதுகாப்பு தரப்பினர் ஆழமாக ஆராய்ந்துவருகின்றனர்.

அதேவேளை, ஜனாதிபதி உள்ளிட்ட பிரமுகர்களின் உயிருக்கு பெரும் ஆபத்து இருப்பதாக அரச புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைக்கவில்லை. எதுஎப்படியோ பிரபுக்களுக்கான பாதுகாப்பு விடயத்தில் அரசு விழிப்பாகவே இருக்கின்றது” என்றும் சட்டம், ஒழுங்கு பிரதியமைச்சர் கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading