Local

கூட்டரசுக்கு ‘குட்பாய் சொல்ல ரெடி’

கூட்டரசிலிருந்து வெளியேறவேண்டிய தேவையேற்படும் பட்சத்தில் அதை செய்வதற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தயாராகவே இருக்கின்றது – என்று அக்கட்சியின் உப தலைவரான அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா இன்று தெரிவித்தார்.


இடைக்கால அரசொன்றை அல்லது மாற்று அரசை அமைப்பதற்காக கூட்டரசிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முழுமையாக வெளியேறவேண்டும் என கூட்டுஎதிரணியால் முன்வைக்கப்பட்டுவரும் கோரிக்கை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


“ கூட்டாட்சியை நல்வழிப்படுத்துவதற்குரிய யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கூட்டரசுக்குள் முரண்பாடுகள் இருந்தாலும் நாட்டின் நலனைக்கருதி முன்நோக்கிச்செல்ல முற்படுகின்றோம்.

எனினும், கூட்டரசிலிருந்து வெளியேறவேண்டும் என்ற தேவை ஏற்படும் பட்சத்தில், கட்சியின் மத்தியகுழுவின் முடிவின் பிரகாரம் – வெளியேறுவதற்கும் தயாராகவே இருக்கின்றோம்” – என்றும் நிமல் கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading