Local

கொழும்பில் அரசியல் நெருக்கடி – புருவத்தை உயர்த்துகிறது பீஜிங்!

இலங்கை அரசியல் நிலவரங்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக,  சீனா தெரிவித்துள்ளது.

பீஜிங்கில் இன்று நடந்த நாளாந்த செய்தியாளர் சந்திப்பில், சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லூ காங் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை எல்லாத் தரப்புகளும் பேச்சுக்களின் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும் என்று சீனா நம்புகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பிரதமராக பதவியேற்றுள்ள மஹிந்தவுக்கு முதலாவதாக வாழ்ந்து தெரிவித்த நாடு சீனாவென்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading