Local

கோட்டாவே சூழ்ச்சி செய்தார்! – 4 மணிநேர விசாரணையின் பின் பொன்சேகா திடுக்கிடும் தகவல்

“தெற்கில் நடைபெற்ற தாக்குதல்கள், கடத்தல்கள் போன்ற குற்றச்செயல்களுடன் என்னைத் தொடர்புபடுத்துவதற்கு கோட்டாபய ராஜபக்ஷ முற்பட்டார்” என்று அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேனா குற்றவிசாரணைப் பிரிவுக்கு இன்று செவ்வாய்க்கிழமை அழைக்கப்பட்டிருந்தார். அவரிடம் நான்கு மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டிருந்த நிலையிலேயே பொன்சேகாவும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

விசாரணையின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துவெளியிட்ட பொ ன்சேகா,

“நான் சிறைபிடிக்கப்பட்ட பின்னர் என்னுடன் நெருங்கி பணியாற்றிய முக்கிய படை அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தெற்கில் நடைபெற்ற கடத்தல்கள், கொலைகள் போன்றவற்றுடன் எனக்குத் தொடர்பிருக்கின்றது என அவர்கள் ஊடாக குற்றச்சாட்டை முன்வைக்க – திணிக்க கோட்டாபய முற்பட்டார். அது கைகூடவில்லை. இன்றும் அவர் முயற்சிக்கின்றார். அதுவும் கைகூடாது” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading