East

சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் தைப்பொங்கல் விழா

மூவின மாணவர்கள் கல்வி கற்கின்ற வலயமாகத் திகழும் சம்மாந்துறை வலயமட்ட தைப் பொங்கள் விழா வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ். நஜீம் தலைமையில் சிறிகோரக்கர் மகா வித்தியாலத்தில் இன்று இடம்பெற்றது.

இவ்விழாவுக்குப் பிரதம அதிதியாக கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர் கலந்து சிறப்பித்தார்.

விழாவில் சம்மாந்துறைக்கு பெருமை தேடிக் கொடுத்த 3 இளம் சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டதுடன்.88 கண்டுபிடிப்புக்களில் 30 விருதுகளைப்பெற்ற இளம் விஞ்ஞானி வினோஜ் குமார், 2018 உயர்தரத்தில் உயிர்முறைமைகள் தொழிநுட்பத்தில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப்பெற்ற றீஸா முகம்மட் மற்றும் பொறியியல் துறைக்குத் தெரிவு செய்யப்பட்டு மாவட்ட மட்டத்தில் முதல்நிலை பெற்ற மாணவன் ஹினாஸ் ஆகியோர்களுக்கும் மாகாணக் கல்விப் பணிப்பாளரினால் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading